ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக நீதிபதி ஆய்வு செய்ய கூடாது.. வேதாந்தா குழுமம் எதிர்ப்பு!
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.
Recommended Video

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்த வழக்கில் இன்று காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக தமிழக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் கேட்டது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சமர்பித்தது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி சந்துரு ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு வேதாந்தா நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க கூடாது என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. வேறு மாநிலத்தை சேர்ந்த நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.
ஸ்டெர்லைட் எந்த மாசையும் ஏற்படுத்தவில்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் தெரிவித்துள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications