ஏப்ரல் 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயரும்: வீரப்பமொய்லி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயரும். அதை யாராலும் தடுக்க முடியாது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்பமொய்லி கூறியுள்ளார்.
டெல்லியில், செய்தியாளர்களிடம் பேசிய வீரப்ப மொய்லி,'' மத்திய அரசு உத்தேசித்துள்ளபடி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சிலிண்டர் விலை உயர்த்தப்படும். சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. அதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக என் மீது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்து இருப்பது சட்ட விரோதமானது" என்றார்.












Click it and Unblock the Notifications