உடல்நலக் குறைவு... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஏ.பி. பரதன் மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலரும் அதன் மூத்த தலைவருமான ஏ.பி. பரதன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையலகத்தில் வசித்து வந்தார் 92 வயதாகும் பரதன். இன்று காலை 8 மணியளவில் பரதன் சுயநினைவிழந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மத்திய டெல்லியில் உள்ள ஜி.பி. பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் பரதன். 1957ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர். 1990களில் இ. கம்யூனிஸ்ட் கட்சியின் துணை பொதுச்செயலரான பின்னர் தேசிய அரசியலில் தீவிர பங்காற்றினர். 1996ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பரதன்.
முதுமையினால் கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய நிலையில் டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் வசித்து வந்தார் பரதன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications