கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட தம்பி... அடித்துக்கொன்ற அண்ணன் அண்ணி
கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட தம்பியை அண்ணனும் அண்ணியும் சேர்ந்து அடித்துக்கொன்ற சம்பவம் கோவாவில் நடந்துள்ளது.
பனாஜி: வீடு, கார் வாங்க கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட தம்பியை அண்ணனும் அண்ணியும் சேர்ந்து அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளனர். போலீஸ் விசாரணையில் மாறி மாறி உளறி கடைசியில் சிக்கிக்கொண்டனர். கோவா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெங்களூருவில் பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவர் ஹோட்டல் ஊழியரை அடித்துக்கொலை செய்துள்ளனர். மனைவியின் நடத்தையைப் பற்றி தவறாக பேசியதால் இந்த கொலை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவாவில் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் சர்வேஷ் கதப்கர் என்பதாகும். இவர் தனது அண்ணன் சந்தேஷ், லத்திகா உடன் பார்சம் பகுதியில் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அவர், தனது வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக அண்ணனும், அண்ணியும் போலீசிற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சர்வேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கனமான ஆயுதத்தினால் சர்வேஸ் அடித்துக்கொல்லப்பட்டிருந்தார். சந்தேஷ், லத்திகாவிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தியதில் இருவருமே உளறிக்கொட்டினர். சரியான பதிலை சொல்லாமல் மாறி மாறி சொல்லவே போலீசின் சந்தேகம் அதிகரித்தது.
இதனையடுத்து தங்கள் பாணியில் போலீசார் விசாரிக்கவே சர்வேஷை கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர். சர்வேஷ் நன்றாக சம்பாதிப்பவர். அவரது வங்கிக் கணக்கில் இருந்து அண்ணன், அண்ணிக்கு கார் வீடு வாங்க பணம் கடனாக கொடுத்தார். இருவரும் பணம் சம்பாதித்தாலும் பணத்தை தம்பிக்கு திருப்பி தராமல் ஏமாற்றினார் அண்ணன் சந்தேஷ்.
சர்வேஷ்க்கு பணம் தேவைப்படவே அண்ணனிடம் கேட்டுள்ளார். அதற்கு சந்தேஷ் திருப்பி தரமுடியாது என்று கூறியுள்ளார். அண்ணியிடம் சண்டை போட்டார் சர்வேஷ். ஆத்திரப்பட்ட அண்ணியும் அண்ணனும் கனமான ஆயுதத்தினால் சர்வேஷை தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கொலை செய்த இருவரும் போலீசில் நாடகமாடியுள்ளனர். கடைசியில் உளறிக்கொட்டி மாட்டிக்கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
ஹோட்டல் ஊழியர் அடித்துக்கொலை
பெங்களூருவில் பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவர் ஹோட்டல் ஊழியரை அடித்துக்கொலை செய்துள்ளனர். மனைவியின் நடத்தையைப் பற்றி தவறாக பேசியதால் இந்த கொலை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் சிவராஜ் என்பதாகும். பெங்களூருவில் சன்னசந்ரா பகுதியில் வசித்து வருகின்றார். இவரது பக்கத்து வீட்டில் சிவு, சிவ சுப்ரமணியா ஆகியோர் வசித்து வருகின்றனர். சிவராஜூம், சிவ சுப்ரமணியாவும் ஒன்றாக மது குடித்த போது வாய் தகராறு ஏற்பட்டது.
அப்போது சிவ சுப்ரமணியாவின் மனைவியைப் பற்றியும் அவரது நடத்தையை பற்றியும் சிவராஜ் தவறாக பேசியதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த சிவசுப்ரமணியா சிவராஜை அடித்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். போதையில் செய்த தவறு சிவசுப்ரமணியாவிற்கு தெரியவில்லை. அவரது மனைவி கண் விழித்து பார்த்த போது சிவராஜ் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. சிவராஜின் சடலத்தை ரோட்டில் வீசிய தம்பதிகள் தலைமறைவாகிவிட்டனர். தலைமறைவான தம்பதியரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications