எரிமலையாய் வெடித்த விஜய் சங்கர்.. மாஸ் காட்டும் சாய் சுதர்சன்! ஐபிஎலில் குஜராத்தை தாங்கும் தமிழர்கள்
அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 தமிழர்களின் அதிரடியான ஆட்டத்தால் 204 ரன்களை குவித்து இருக்கிறது. இதற்கு முந்தைய போட்டியிலும் இந்த 2 பேரின் அசத்தலான ஆட்டம் காரணமாகவே குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது. யார் அந்த தமிழர்கள்? குஜராத்தின் வெற்றியில் இவர்களின் பங்கு என்ன? விரிவாக பார்ப்போம்.
ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு அறிமுகமாகி முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி. வில்லியம்சன், முஹம்மது ஷமி, சுப்மன் கில், ரஷீத் கான் போன்ற முன்னணி கிரிக்கெட் வீரர்களை கொண்ட அந்த அணி, இந்த தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை அணியை எதிர்கொண்டது.

இம்பாக்ட் வீரர்: முதல் போட்டியில் சுப்மன் கில் அசத்தலாக 63 ரன்கள் எடுத்தாலும், அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேற அவர் ஆடிய 3 வது இடத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத அனுபவம் குறைவான இளம் வீரர் சாய் சுதர்ஷனை இம்பாக்ட் வீரராக களமிறக்கியது குஜராத் டைட்டன்ஸ்.
அவரும் முதல் போட்டியிலேயே 22 ரன்களை எடுத்து நம்பிக்கை கொடுத்தார். அதேபோல் மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கரும் அந்த போட்டியில் முக்கியமான தருணத்தில் 27 ரன்களை அடித்து நம்பிக்கை கொடுத்தார். ரஷீத் கான், ஷமி, சுப்மன் கில் ஆகியோரின் ஆட்டம் குஜராத் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும் இந்த 2 தமிழர்களின் ஆட்டமும் அணியின் பேட்டிங்கிற்கு தூணாக அமைந்தது.

சாய் சுதர்சனின் எழுச்சி: முதல் போட்டியில் காயமடைந்த வில்லியம்சன் குணமடையாததால், அவரது இம்பாக் வீரராக களமிறங்கிய சாய் சுதர்ஷனுக்கு 3 வது பேட்ஸ்மேன் இடம் நிரந்தமானது. டெல்லிக்கு எதிராக குஜராத்தின் 2வது போட்டியில் இந்த 2 தமிழர்களின் பங்களிப்பு மகத்தானது. 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான சாஹா மற்றும் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களுக்கே அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றி கேள்விக்குறியானது. அந்த நேரத்தில் விஜய் சங்கருடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 48 பந்துகளில் 62 ரன்களை குவித்து வெற்றிக்கு உதவினார். விஜய் சங்கரும் விக்கெட்டுகளை சரிய விடாமல் 29 ரன்களை எடுத்து நல்ல பார்னர்ஷிப்பை உருவாக்கி கொடுத்தார். இந்த இருவர் இல்லாவிட்டால் குஜராத் அணி அந்த போட்டியில் வெற்றிபெற்று இருப்பது கடினம்.

விஜய் சங்கர் விளாசல்: இந்த நிலையில் இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான 3 வது போட்டியில் குஜராத் விளையாடி வருகிறது. முதலில் பேட் செய்த குஜராத் அணியில் சாஹா 17 ரன்களிலும், சுப்மன் கில் 39 ரன்களிலும் ஆட்டமிழக்க சாய் சுதர்சன் மறுபக்கம் ரன் குவிப்பில் ஈடுபட்டார். அபிநவ் மனோஹர் 14 ரன்களில் ஆட்டமிழக்க விஜய் சங்கருடன் மீண்டும் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் 2 வது முறையாக அரைசதம் விளாசினார்.
இந்த நிலையில் கடைசி ஓவர்களில் திடீரென எரிமலையாக வெடித்த விஜய் சங்கர் 5 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 63 ரன்களை விளாசி மாஸ் காட்டினார். இதனால் குஜராத் அணி 204 ரன்களை குவித்து உள்ளது. இந்த போட்டியிலும் 2 தமிழர்களின் பங்களிப்பே குஜராத்தின் ரன் குவிப்பிற்கும் பெரும் பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications