இந்தியாவுக்கு எதிராக சர்வதேச சதி..மோடியை தொடர்ந்து காங்கிரஸ் மீது ஆர்.எஸ்.எஸ்.மோகன் பகவத் பாய்ச்சல்!
நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான அன்னிய சக்திகள் நம் நாட்டை கட்டுப்படுத்தும் வகையில் அரசு, சட்டம் மற்றும் அரசு நிர்வாகம் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர் என காங்கிரஸ் கட்சியை பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கடுமையாக விமர்சித்துள்ளார். ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பேசிய பிரதமர் மோடியும், இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சதியில் காங்கிரஸ் இணைந்துள்ளது என குற்றம்சாட்டியிருந்தார்.
விஜயதசமி நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமது தலைமையகம் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெகு விமரிசையாக கொண்டாடும். பல்லாயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். இயக்க தொண்டர்கள் பங்கேற்கும் இந்த விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் ஆற்றும் உரை மிக முக்கியமானதாகும். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கை பிரகடன உரையாகவே இது கருதப்படுவது வழக்கம்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கடந்த ஆண்டு விஜயதசமி நாளில் பேசுகையில், மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ளது; மக்களிடையே ஒற்றுமை தேவை என பேசியிருந்தார். இந்த ஆண்டும் இன்று விஜயதசமி விழாவில் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது: ஹிந்து தர்மம் (இந்து) என்பது புதியதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. இந்த மனிதகுல மேம்பாட்டுக்கான அங்கீகாரத்தைக் கொண்ட உலகத்துக்கே வழிகாட்டக் கூடிய வாழ்வியல்தான் இந்து தர்மம் என்பது. இது ஒரு மதம் அல்ல. இந்தியாவின் வெளிப்பாடு. இந்தியாவில் பல்வேறு மதங்கள் கோட்பாடுகள் இருக்கின்றன. அனைத்தையும் இணைக்கிற ஒரு ஆன்மீகமே தர்மம் என்பது. இந்த தர்மம் உலகளாவிய ஒன்றாக திகழ்கிறது.
பன்முகத்தன்மை கொண்ட மிகப் பெரிய சமூகம் ஒன்றில் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்த பன்முகத்தன்மை சமூகத்தில் பிளவுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதுவும் நாங்கள் தனித்துவமானவர்கள் என கூறிக் கொள்கிறவர்கள் இந்த தேசத்தின் அரசு, சட்டம், அரசு நிர்வாகம் உள்ளிட்டவற்றை மீது அவதூறு பரப்பி பலவீனப்படுத்தி அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். இத்தகைய செயல்பாடுகள் என்பது அன்னிய சதியாளர்கள் நமது தேசத்தைக் கட்டுப்படுத்த மட்டும்தான் உதவும். நமது தேசத்துக்கு எதிராக சர்வதேச அளவில் சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வங்கதேச நாட்டில் இந்தியாவை எதிரியாக கட்டமைத்திருக்கின்றனர்; பாகிஸ்தானுடன் இணைந்துவிட வேண்டும் என்கின்றனர். இந்த தேசத்திலும் அத்தகைய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று சதிகாரர்கள் சதி செய்கின்றனர். வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டனர். எந்த ஒரு நாட்டிலும் அடிப்படைவாதிகள் இருந்தால் சிறுபான்மையினர் தாக்கப்படவே செய்கின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அவமானகரமானது. அதுவும் இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் பாதுகாப்பட்ட விதம் அதிர்ச்சிக்குரியது. குற்றவாளிகளும் அரசியலும் இணைந்து இருப்பதாலேயே இத்தகைய நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.
இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; தலித்துகள், ராஜபுத்திரர்கள் என்பது போல வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் இந்துக்களாக ஒன்றிணைய வேண்டும். ஜம்மு காஷ்மீரில் நாம் அமைதியாக தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். இஸ்ரேல்- ஹிஸ்புல்லா மோதலின் தாக்கம் கவலைக்குரியதாகும். இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான போது பாஜகவின் வெற்றியை கொண்டாடிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் கட்சியை பகிரங்கமாக இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சதியில் இணைந்திருக்கிறது என குற்றம்சாட்டி இருந்தார். தற்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் அதே குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி பெயரை சொல்லாமல் குறிப்பிட்டிருக்கிறார். மோகன் பகவத்தின் இந்த பேச்சை பிரதமர் மோடியும் பகிர்ந்துள்ளார்.
மோகன் பகவத்தின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications