விமானத்தில் ஆசிரியையின் காலைத் தொட்டு சில்மிஷம்... தெலுங்கு தேசம் கவுன்சிலர் மீது வழக்கு
ஹைதராபாத்: விமானத்தில் ஆசிரியை ஒருவருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக தெலுங்கு தேசம் கட்சி கவுன்சிலர் வெங்கடேஸ்வர ராவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் வெள்ளிக்கிழமை புனேவில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானத்தில் பயணம் செய்தார். அவர் அருகே தெலுங்கு தேசம் கட்சி கவுன்சிலர் வெங்கடேஸ்வர ராவ் அமர்ந்திருந்தார்.

அவர் காலால் தனது காலை தொட்டதாகவும், செக்ஸ் தொல்லை அளித்ததாகவும் அந்த பெண் விமான சிப்பந்திகளிடம் புகார் தெரிவித்தார். மேலும் விமானம் ஹைதராபாத்தில் தரையிறங்கியதும் போலீசில் ராவ் மீது புகார் அளித்தார்.
அதற்குள் ராவ் வேறு விமானம் மூலம் விஜயவாடாவுக்கு சென்றுவிட்டார். உடனே போலீசார் இது குறித்து விஜயவாடா விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராவ் விஜயவாடா விமான நிலையத்தை அடைந்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில்,
விமானத்தில் தூங்கும்போது தெரியாமல் என் கால் பட்டிருக்கும். எனக்கு தெலுங்கு மட்டும் தான் தெரியும். வேறு மொழி பேசத் தெரியாது. அதனால் அந்த பெண்ணிடம் எடுத்துக்கூற முடியவில்லை என்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் ராவ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக ராவ் புனே செல்லும்போது ரயிலில் சில பெண் பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் புகார் உள்ளது. அந்த புகாரையும் ராவ் மறுத்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications