தொடர் மின்வெட்டு.... எம்.எல்.ஏ., கவுன்சிலரை கட்டி வைத்து பொதுமக்கள் போராட்டம்- உ.பி.யில் பரபரப்பு
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர் மின் வெட்டால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. மற்றும் கவுன்சிலரையும் சிறைபிடித்து கயிற்றில் கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சந்தவ்லி மாவாட்டத்தில் உள்ள முகல் சராய் பகுதி மக்கள் தொடர் மின்வெட்டாலும், போதிய குடிநீர் வசதி இல்லாததாலும் அவதிப்பட்டனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை.

இதனால் அப்பகுதிக்கு வந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அத்தொகுதியின் எம்.எல்.ஏ பப்பான் சிங் செளவுகான் மற்றும் அவருடன் வந்த கவுன்சிலர் கயாமுதின் ஆகியோரை கிராம மக்கள் சிறைபிடித்தனர். பலமணி நேரம் அவர்களை கயிற்றில் கட்டிவைத்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எம்.எல்.ஏ மற்றும் கவுன்சிலரை விடுதலை செய்வது தொடர்பாக கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அந்த கிராமத்துக்கு தேவையான அனைத்து பணிகளையும் முடித்து தருவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதியைத் தொடர்ந்து இருவரையும் பொதுமக்கள் விடுவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications