தாக்கம் ஏற்படுத்தாத மோர்பி பாலம் விபத்து.. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் முன்னிலை
காந்திநகர்: குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது சொந்த தொகுதியில் 5000 வாக்குகள் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநிலத்தில் கடந்த 1 மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக 182 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதாலும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலம் இது என்பதாலும் இம்முறை முன்னெப்போதும் இல்லாத வெற்றியை பெற பாஜக முயன்று வருகிறது.

சோதனை
பூபேந்திர படேல் அகமதாபாத் மாவட்டத்தின் கட்லோடியா தொகுதியில்
போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஒரு
வேளை இதில் தோல்வியடைந்துவிட்டால் பாஜகவுக்கு இது பெரிய மானப் பிரச்னையாக
மாறிவிடும். தேர்தல் முடிவுகளை பொறுத்த அளவில் காலை 9 மணி நிலவரப்படி
பூபேந்திர படேல் தனது போட்டியாளர்களைவிட 5000 வாக்குகள் முன்னிலையில்தான்
இருக்கிறார். இது அப்படியே தொடர வேண்டும் என பாஜகவினர் விரும்புகின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜக 99 தொகுதிகளை வென்றது. ஆனால்
காங்கிரசுக்கும் பாஜகவும் இடையேயான வாக்கு வித்தியாசம் 10 சதவிகிதமாக
குறைந்தது. இதனையடுத்து இந்த தேர்தலில் வெற்றி பெற அனைத்து வியூகங்களையும்
வகுத்திருக்கிறது.

மோர்பி
என்னதான் புதிய வியூகங்களை வகுத்து தேர்தல் பணியாற்றினாலும், பெட்ரோல்,
டீசல் விலையுயர்வு, பணவீக்கம், வேலையின்மை என பல்வேறு விஷயங்கள் பாஜகவுக்கு
எதிராக இருக்கிறது. மட்டுமல்லாது மோர்பி பால விபத்து புதிய சலசலப்பை
ஏற்படுத்தியுள்ளது. எனவே பூபேந்திர படேலின் வெற்றியை அனைவரும் உன்னிப்பாக
கவனித்து வருகின்றனர். மோர்பி பால விபத்தில் 140 பேர் உயிரிழந்த நிலையில்,
ஒரேவா குழுமத்திற்கு பாலத்தை பராமரிக்கும் உரிமையை ஏன் கொடுக்கப்பட்டது என
அம்மாநில உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளது.
இந்த விபத்தை காங்கிரஸ் அரசியலாக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டாலும்,
ஆம் ஆத்மி மேடைக்கு மேடை இது குறித்துதான் பேசி வருகிறது.

கருத்து கணிப்புகள்
கட்லோடியா தொகுதியில், பூபேந்திர படேலை எதிர்த்து காங்கிரஸின் அமீ யாக்னிக்
மற்றும் ஆம் ஆத்மி சார்பில் விஜய் படேல் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி உள்ளாட்சி தேர்தலில் 15 ஆண்டுகளுக்கு
பின்னர் பாஜகவின் ஆதிக்கத்திற்கு ஆம் ஆத்மி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதேபோல குஜராத் தேர்தலிலும் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் என பஞ்சாப்
மாநில முதலமைச்சர் பகவந்த் மான் கூறியிருந்தார். அதாவது, "இந்த தேர்தலில்
பாஜக தனது முழு பலத்தை பயன்படுத்தி ஆம்ஆத்மியை தடுக்க நினைத்தது. ஆனால்
தேர்தல் முடிவுகள் ஆச்சரியமானதாக இருக்கும். கருத்துக்கணிப்புகளை
பொய்யாக்கி நாங்கள் வெற்றியை நிலை நாட்டுவோம்" என்று கூறியிருந்தார்.

ஏன் வெற்றி அவசியம்
மேலும், "எங்கள் கட்சியின் சார்பில் வெற்றி பெரும் வேட்பாளர்கள் தொடர்ந்து
எங்கள் கட்சியிலேயே நீடிப்பார்கள். எங்கள் வேட்பாளர்கள் விற்பனைக்கு அன்று"
எனவும் கூறியிருந்தார். மறுபுறம் இந்த தேர்தலில் பெறும் வெற்றிதான் அடுத்து
வர உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் பாஜகவுக்கு இந்த
தேர்தல் பலபரீட்சைதான். ஏனெனில் 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான
ஆர்எஸ்எஸ் தனது 100வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. எனவே இந்த
கொண்டாட்டத்தை சாத்தியமாக்க பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்க
வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications