ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. அடுத்த வாரமே கோஹ்லிக்கு திருமணம்.. இத்தாலியில் அனுஷ்காவுடன் டும்டும்!
Recommended Video

டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவை இன்னும் சில நாட்களில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவியுள்ளது.
நீண்ட கால காதலர்களான இருவரும், இத்தாலி நாட்டில் வைத்து் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றுள்ள நிலையில், டி20 தொடரில் கேப்டன் கோஹ்லிக்கு லீவு தரப்பட்டிருந்தது. ஓய்வுக்காகவே இவ்வாறு அவர் விலகியுள்ளார் என கூறப்பட்ட நிலையில்தான், கோஹ்லி திருமணத்திற்காக பிரேக் எடுத்துள்ளதாக தற்போது அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.

பிரமாண்ட ஏற்பாடுகள்
அனுஷ்கா ஷர்மாவுடன், கோஹ்லி நாளையே இத்தாலி கிளம்ப உள்ளதாகவும், அங்கு வைத்து பிரமாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாகவும் கோஹ்லி நட்பு வட்டாரங்கள் வாயிலாக மீடியாக்களுக்கு சில செய்திகள் கசிந்துள்ளன.

குடும்பம், நண்பர்கள்
இத்தாலி திருமண நிகழ்வில் பங்கேற்க கோஹ்லியின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரில் திருமண வைபோகம் நிகழ உள்ளது.

மும்பையில் வரவேற்பு
திருமண நிகழ்வில் கிரிக்கெட் வீரர்கள் யாருமே பங்கேற்கப்போவதில்லையாம். இது முழுக்க உறவினர்களும், நண்பர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இருக்கப்போகிறது. மும்பையில் டிசம்பர் 21ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலியில் திருமணம்
டிசம்பர் 9, 10, 11 மற்றும் 12ம் தேதிகளில் கோலாகலமாக திருமண வைபோகம் இத்தாலியில் நடைபெற உள்ளதாக ஆணித்தரமாக கூறுகின்றன அந்த தகவல்கள். இம்மாதம் முழுக்க திருமணம் தொடர்பான விழாக்களில் பிஸியாக இருக்கப்போகும் கோஹ்லி, உத்வேகத்தோடு, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளாராம்.
-
இனி விராட் கோலியே அவுட்டானாலும் கவலை இல்லை.. பிளே ஆஃப் ஸ்பெஷலிஸ்ட் ரஜத் பட்டிதார் இருக்காரு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications