For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு கேள்வி கேட்கிறேன்.. பதில் சொல்லுங்கள்.. காஷ்மீர் சிறுமி விவகாரத்தில் குரல் கொடுக்கும் கோஹ்லி!

காஷ்மீரில் கொல்லப்பட்ட 8 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் பற்றி இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் வன்புணர்வுக்கலாக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கோஹ்லி

    காஷ்மீர்: காஷ்மீரில் கொல்லப்பட்ட 8 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் பற்றி இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

    காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இதில் தொடர்புடைய எல்லோரும் பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள். இந்த விஷயம் தற்போது ஒரு தேசிய பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது.

    கோஹ்லி

    கோஹ்லி

    இந்த விஷயத்தில் மத்திய பாஜக அரசுக்கு தெரிந்த ஆட்கள் சம்பந்தபட்டு இருப்பதால், பெரும்பாலான பிரபலங்கள் இதுபற்றி குரல் கொடுக்கவில்லை. முக்கியமாக கிரிக்கெட் வீரர்கள் இதுபற்றி இதுவரை வாய் திறக்கவே இல்லை. ஆனால் முதல் முறையாக இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி இது பற்றி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

    ஒரு கேள்வி கேட்கிறேன்

    ஒரு கேள்வி கேட்கிறேன்

    அவர் பேசும் வீடியோ, நான் உங்களை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன் என்று விராட் கோஹ்லி பேச்சில் இருந்து தொடங்குகிறது. ''உங்கள் குடும்பத்தில் இப்படி விஷயம் நடந்தால், அதையும் இதேபோல் நின்று வேடிக்கைதான் பார்ப்பீர்களா, இல்லை நீங்கள் சென்று குரல் கொடுப்பீர்களா? என்னுடைய ஒரே கேள்வி இதுதான்'' என்று மக்களை பார்த்து கேள்வி எழுப்பி உள்ளார்.

    வேடிக்கை பார்க்கிறார்கள்

    மேலும் ''சிலர் இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்க அனுமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு விஷயம் நடக்கும் போது அவர்கள் அதை வேடிக்கை பார்க்கிறார்கள். அது அவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இல்லை. ஒரு சிறுமிக்கு இப்படி நடப்பது அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இல்லை'' என்று வருத்தமாக தெரிவித்துள்ளார்.

    அரசு

    அரசு

    முக்கியாமாக ''சில ஆண்கள் இதுதான் வாய்ப்பு என்று தவறு செய்கிறார்கள். பின் அதில் இருந்து தப்பிக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களும், அதற்கு ஆதரவாக பேசுகிறார்கள். இதைவிட மோசமான விஷயம் என்ன இருக்க முடியும். '' என்ற வரிகளை பேசிக்கொண்டு இருக்கும் அவர் மிகவும் சோகமாகிவிடுகிறார்.

    ஜெய் ஹிந்த்

    ஜெய் ஹிந்த்

    கடைசியாக ''நம் சமூகத்தில் சிலர் இது போன்ற விஷயங்களை எளிதாக சகித்துக் கொள்கிறார்கள். அதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. இது போன்ற சமூகத்தில் இருக்கவே வெட்கமாக இருக்கிறது. நம்முடைய சிந்தனைகளை நாம் மாற்ற வேண்டும். நீங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் என்று நினைத்து பாருங்கள். பொறுப்பானவர்களாக இருங்கள். ஜெய் ஹிந்த்'' என்றுள்ளார்.

    English summary
    Virat Kohli releases video on Kashmiri girl rape and murder. An 8-years old Kashmiri Muslim girl brutally raped and killed by 7 Hindutuva groups, in which 4 of them are police. BJP keeping their bad role in this issue. Kashmir girl child has killed inside a Hindu temple, she has been tortured for 5 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X