கர்நாடகாவில் வோல்வோ பஸ் தீப்பிடித்து விபத்து: 7 பேர் உடல் கருகி பலி, 40 பேர் காயம்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து நேஷனல் டிராவல்ஸுக்கு சொந்தமான வோல்வோ பேருந்து ஒன்று 52 பயணிகளுடன் நேற்று இரவு மும்பைக்கு கிளம்பியது. பேருந்து ஹவேரி மாவட்டத்தில் உள்ள குனிமெல்லி பாலம் அருகே இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்று கொண்டிருக்கையில் சாலையில் உள்ள டிவைடரில் மோதியது. இதில் பேருந்தின் டீசல் டேங்க் தீப்பிடித்து எரிந்தது.
திடீர் என்று ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டு பயணிகள் எழுந்து பார்த்தபோது பேருந்து தீப்பிடித்துக் கொண்டிருந்தது. பயணி ஒருவர் பேருந்து கண்ணாடியை உடைப்பதற்குள் 2 வயது குழந்தை உள்பட 7 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 40 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கிளீனரும், 2 டிரைவர்களும் தப்பித்துவிட்டனர்.
மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. ஜமீல் அகமதுவின் தம்பி ஷகீல் அகமது தான் நேஷனல் டிராவல்ஸின் உரிமையாளர் ஆவார்.
முன்னதாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற வோல்வோ பேருந்து ஆந்திர மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தில் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 45 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications