இடைத்தேர்தல் விறுவிறுப்பு: அஸ்ஸாமில் 47 % உ.பியில் 33% வாக்குப்பதிவு
லக்னௌ: குஜராத் மாநிலம் வதோதரா, உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி, தெலங்கானா மாநிலம் மேடக் ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 33 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த வதோதரா தொகுதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ராஜினாமா செய்த மைன்புரி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்த மேடக் ஆகிய மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

33 சட்டசபைத் தொகுதிகள்
இதைத் தவிர, உத்தரப் பிரதேசத்தில் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், குஜராத் மாநிலத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், வடகிழக்கு மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும், மேற்குவங்கத்தில் 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களில் தலா ஒரு பேரவைத் தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

உ.பியில் 33%
காலையில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு நேரம் செல்லச்செல்ல விறுவிறுப்படைந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி உ.பி.யில் 33 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் 30%
சத்தீஸ்கரில் 40 சதவீத வாக்குகளும், ஆந்திராவில் 30 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.

அஸ்ஸாமில் 47
அஸ்ஸாம் சில்சார், லக்கிபூர், ஜமுனாமுக் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 25 வேட்பாளர்களில் களத்தில் இருந்தனர். இங்கு காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மதியம் 1 மணி நிலவரப்படி 47 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒட்டு எண்ணிக்கை
டெல்லியல் 3 பாஜக எம்.எல்.ஏக்கள் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதால் 3 தொகுதிகள் காலியாக உள்ளன. அங்கு சட்டசபையை கலைப்பது தொடர்பான முடிவு இழுபறியில் இருப்பதால் டெல்லியில் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. 16-ஆம்தேதி (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை தொடங்கி அன்றே முடிவுகள் வெளியாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications