தமிழகத்தில் 17 தொகுதிகளில் 'யாருக்கு வாக்களித்தோம்' என்பதை அறியும் வசதி அறிமுகம்
டெல்லி: தமிழகத்தில் 17 சட்டசபை தொகுதிகளில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான வசதியுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் கேரளா சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக மே 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அஸ்ஸாமில் 2 கட்டமாக, மேற்கு வங்கத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த வாக்குகள் அனைத்து மே 19-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தல்களில் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் முறை பல தொகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடந்த முறை சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் இந்த இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வாக்குப் பதிவு இயந்திரத்தில் நாம் வாக்களித்ததும் ஒரு அச்சிட்ட காகிதம் வெளியே வரும். அதில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பது பதிவாகி இருக்கும். இந்த சீட்டை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தச் சீட்டு அருகே உள்ள பெட்டிக்குள் விழுந்துவிடும். இது வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் என அழைக்கப்படுகிறது.

தற்போது நடைபெற உள்ள தேர்தலில் தமிழகத்தில் 17 தொகுதிகளில் இந்த வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் அறிமுகப்படுத்த உள்ளது. இதேபோல் அஸ்ஸாமில் 10, கேரளாவில் 12, மேற்கு வங்கத்தில் 22, புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் இந்த வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் பயன்படுத்தப்படும் 17 தொகுதிகள்:
அண்ணா நகர்
வேலூர்
கிருஷ்ணகிரி
சேலம் (வடக்கு)
ஈரோடு( மேற்கு)
திருப்பூர் (வடக்கு)
கோவை (வடக்கு)
திண்டுக்கல்
திருச்சி (மேற்கு)
கடலூர்
தஞ்சாவூர்
காஞ்சிபுரம்
விழுப்புரம்
மதுரை (கிழக்கு)
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
புதுச்சேரியில் உப்பளம், உருளையாம்பேட்டை, காரைக்கால் தெற்கு ஆகிய தொகுதிகளில் இந்த இயந்திரம் பயன்படுத்தடும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications