வளரும் பாஜக.. அடக்க வேண்டிய கட்டத்தில் மமதா.. இடதுசாரிகளுடன் கை கோர்க்க மே.வ.காங். கோரிக்கை
கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அறிவுறுத்தியுள்ளது. அப்போதுதான் மேற்கு வங்கத்தில் பாஜகவின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியும், 2021ல் மமதா மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதையும் தடுக்க முடியும் என அது கூறியுள்ளது.
இதுதொடர்பாக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தாக வேண்டிய தேவை எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் தற்போது காங்கிரஸ் வசம் உள்ள தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்று சிபிஎம் பொலிட்பீரோ முடிவு செய்துள்ளது. இது கவனிப்புக்குரியது. எனவே உடனடியாக இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.
இதன் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முடியும். அதேபோல 2021ல் மமதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2014 லோக்சபா தேர்தலின்போது சிபிஎம் ரெய்கஞ்ச், முர்ஷிதாபாத் ஆகிய தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு மால்டா வடக்கு, மால்டா தெற்கு, பேரம்பூர், ஜாங்கிபுர் ஆகிய தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை இந்த நான்கு தொகுதிகளைத் தவிர புருலியாவிலும் காங்கிரஸுக்கு நல்ல செல்வாக்கு உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். எனவே இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் அது நிச்சயம் ஆளுங்கட்சிக்கும், பாஜகவுக்கும் சவாலாகவே அமையும் என்றும் கருதப்படுகிறது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications