கொரோனா- மத்திய குழுவுக்கு ஒத்துழைப்பு தரவில்லை.... மே. வங்க அரசு மீது புகார்
கொல்கத்தா: கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய சென்ற மத்திய குழுவுக்கு மேற்கு வங்க மாநில அரசு ஒத்துழைப்பு தரவில்லை என அக்குழுவின் தலைவர்களில் ஒருவர் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பாஜக அரசுடன் பல்வேறு விவகாரங்களில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த பின்னணியில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய 2 குழுக்களை மேற்கு வங்கத்துக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.

இது தொடர்பாக மேற்கு வங்க அரசுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியது. ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மத்திய அரசின் முடிவுக்கு கடு எதிர்ப்பை தெரிவித்தார்.
எந்த ஒரு காரணமுமே இல்லாமல் மேற்கு வங்கத்துக்குள் மத்திய குழுவை அனுமதிக்க முடியாது; இது மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் செயல் எனவும் மமதா பானர்ஜி ஆவேசத்தை காட்டியிருந்தார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் மமதா பானர்ஜி கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசின் குழுக்கள் ஒன்றின் தலைவரான அபூர்வ சந்திரா டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரான அபூர்வ சந்திரா அந்த பேட்டியில், மேற்கு வங்க மாநில தலைமை செயலாளருடன் தொடர்பில்தான் இருக்கிறேன் அவரை நேரில் சந்தித்தும் பேசினேன்.
ஆனால் திடீரென தங்களால் ஒத்துழைக்க இயலாது எனகூறியுள்ளார். இதனால் தங்களது ஆய்வுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications