Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலிரவு வேண்டாம்! மனைவி பேச்சை கேட்டு தனியாக படுத்த புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கதி.. அய்யோ போச்சே

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ‛‛இன்று முதலிரவு வேண்டாம். எங்களின் பாரம்பரியப்படி கணவனும், மனைவியும் முதலிரவில் தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது'' என புதுப்பெண் கூறியதை நம்பிய இளைஞர் தனியாக படுத்தார். அதன்பிறகு அதிகாலை 3 மணியளவில் கண்விழித்தபோது அந்த மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நகை, பணத்தை எடுத்து கொண்டு புதுப்பெண் வீட்டைவிட்டு எஸ்கேப் ஆன நிலையில் அதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கிஷான்கார்க் பகுதியை சேர்ந்தவர் 32 வயது இளைஞர். இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. பல இடங்களில் மணப்பெண் தேடினர். ஆனால் மணப்பெண் அமையவில்லை. இதற்கிடையே தான் ஜிதேந்திரா என்பவர் அந்த இளைஞரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டார்.

we-cannot-sleep-together-in-first-night-bride-runs-away-with-gold-and-cash-from-groom-house-in-raj
Photo Credit:

அப்போது தன்னை திருமண புரோக்கர் என்று அறிமுகம் கொண்டார். அதோடு ஆக்ராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உள்ளார். சம்மதம் தெரிவித்தால் திருமணம் செய்து வைப்பதாக நம்பிக்கையளித்தார். இளைஞரின் வீட்டினரும் மணப்பெண் கிடைக்காத விரக்தியில் இருந்ததால் அவர்கள் கண்மூடித்தனமாக ஜிதேந்திராவை நம்பினர்.

இதையடுத்து ஜிதேந்திரா சுமார் 27 வயது நிரம்பிய பெண் ஒருவரை அறிமுகம் செய்தார். இளைஞரின் குடும்பத்துக்கு அந்த பெண் பிடித்துப்போனது. திருமண ஏற்பாடுகள் தொடங்கியது. ஜிதேந்திரா ரூ.2 லட்சத்தை கமிஷனாக பெற்று கொண்டார். அதன்பிறகு இருவரின் திருமணமும் ஜெய்ப்பூரில் கோலகலாமாக நடந்தது. இளைஞரின் சம்பிரதாய முறைப்படி திருமணம் நடந்தது. அறுசுவை உணவுகளுடன் திருமண விழா சிறப்பாக முடிவடைந்தது.

அதன்பிறகு கிஷான்கார்க் பகுதிக்கு புதுமண ஜோடி வந்தனர். முதலிரவில் இளைஞரும், இளம்பெண்ணும் தங்களின் ‛பெட்ரூம்' சென்றார். அப்போது அந்த இளம்பெண், ‛‛இன்று முதலிரவு வேண்டாம். நாம் இருவரும் இன்று ஒன்றாக படுக்கையை பகிர வேண்டாம். எங்களின் பாரம்பரியப்படி முதலிரவில் கணவன் - மனைவி சேர்ந்து இருக்க கூடாது'' என்றார். இதனை மாப்பிள்ளை பெரிதாக எடுக்கவில்லை. இருவரும் ஒரே அறையில் தனித்தனியாக படுத்து கொண்டனர்.

சுமார் 3 மணியளவில் திடீரென்று மாப்பிள்ளைக்கு தாகம் எடுத்தது. தண்ணீர் குடிக்க அவர் கண்விழித்தார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தனது அறையில் தனியாக படுத்து கிடந்த மனைவியை காணவில்லை. அவரை வீடு முழுவதும் தேடிப்பார்த்தார் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி வீட்டில் இருந்த நகை, பணமும் மாயமாகி இருந்தது. இதனால் மனைவி தான் பணம், நகையை எடுத்து கொண்டு எஸ்கேப் ஆகியிருக்க வேண்டும் என்று நினைத்தார்.

உடனடியாக அந்த இளைஞர் பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்டவற்றில் தனது குடும்பத்தினருடன் தேடினார். அங்கு அவர் இல்லை. அதேபோல் திருமண புரோக்கர் ஜிதேந்திராவை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதனால் இருவரும் சேர்ந்து தான் மோசடி செய்திருப்பதாக இளைஞரின் குடும்பத்தினர் நினைத்தர். இதுபற்றி மதன்கஞ்ச் போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண் மற்றும் திருமண புரோக்கர் ஜிதேந்திரா ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இளைஞரின் குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+