காஷ்மீர் சிறுமியின் கோரக் கொலை.. பாஜகவை எப்படி டிரீட் செய்கிறார்கள் பாருங்கள் மலையாளிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம்-கேரளாவில் எதிர்ப்பு

  திருவனந்தபுரம்: காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் உள்ள வீடுகளில் இடைத்தேர்தலுக்காக வாக்கு கோரி பாஜகவினர் உள்ளே வராதீர் , இந்த வீட்டில் 10 வயதில் சிறுமி இருக்கிறாள் என்று நோட்டீஸ் எழுதி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமியை கோவிலுக்குள் அடைத்துவைத்து உணவு கொடுக்காமல் சிறுவன், விசாரணை நடத்த சென்ற காவல் துறை அதிகாரி உள்பட 8 பேர் மயக்க மருந்து கொடுத்து 3 நாட்கள் தொடர்ந்து வன்புணர்வு செய்து இறுதியில் அந்த சிறுமி உயிரிழந்ததும் காட்டுப் பகுதியில் உடலை தூக்கி வீசி எறிந்துள்ளனர்.

  இந்த சம்பவம் ஜனவரி மாதம் நிகழ்ந்தது. சிறுமியை மயக்கத்திலேயே வைத்திருக்க பயன்படுத்திய மயக்க மருந்தால் இதயம் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்துவிட்டன.

  அதிர்வலை

  அதிர்வலை

  3 மாதங்கள் கழித்து வெளியே வந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த சம்பவத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

  பாஜக எம்எல்ஏ

  பாஜக எம்எல்ஏ

  உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் பகுதியில் மாணவி ஒருவரை பாஜக எம்எல்ஏ மற்றும் கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில் போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் முதல்வர் யோகியின் வீடு முன்பு தற்கொலை முயற்சி செய்தார். இறுதியில் மாணவியின் தந்தை உயிரிழந்தார்.

  செங்கன்னூர் பகுதியில்

  செங்கன்னூர் பகுதியில்

  இந்த நிலையில் கேரள மாநிலம் செங்கன்னூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காஷ்மீர், உ.பி. பலாத்கார சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த கேரளாவின் அந்த தொகுதி மக்கள் பாஜகவுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய நோட்டீஸை கதவின் வெளியே தொங்கவைத்துள்ளனர்.

  பாஜகவுக்கு தடை

  பாஜகவுக்கு தடை

  ஒரே இரவில் அனைத்து வீடுகள் மற்றும் கட்டடங்களில் தொங்கவிடப்பட்டுள்ள நோட்டீஸ்களில் உள்ள எழுத்துகளில் வித்தியாசங்கள் உள்ளன. ஆனால் அதன் சாராம்சம் ஒன்றுதான். அது, "இந்த வீட்டில் 10 வயதுக்குட்பட்ட சிறுமி இருக்கிறாள், வாக்கு கேட்க பாஜகவினர் உள்ளே வர வேண்டாம். கேட்டுக்கு வெளியே நில்லுங்கள்" என்று எழுதப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  In Kerala byelection is going to conduct for Chengannur, areas in this house have sprung with the posters that This house has 10 years old girls, dont come inside the gate. They boycotts BJP in the Kathua Rape murder case.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற