தாங்க முடியவில்லை.. பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வேண்டும்.. மேனகா காந்தி கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜம்முகாஷ்மீரின் 8 வயது சிறுமி ஆசிஃபா கொலை-போராட்டங்கள் வலுத்தது

  டெல்லி: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழக்கும் விதத்தில் சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பாஜக அமைச்சர் மேனகா காந்தி கோரிக்கை வைத்துள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து இருப்பதாக கூறியுள்ளார்.

  காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் சில கொடூரர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மிகவும் தாமதமாகவே இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது.

  We need the death penalty for child rape asks, Maneka Gandhi

  இந்த நிலையில் ஹிந்துத்துவா இயக்கங்களை சேர்ந்த நபர்கள் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதால், பாஜக கட்சி இதில் இப்போதுவரை குரல் கொடுக்காமல் இருக்கிறது. ஆனால் தற்போது இதை பற்றி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி குரல் கொடுத்துள்ளார்.

  இதுகுறித்து பேசிய அவர் ''காஷ்மீர் சிறுமிக்கு நடந்த சம்பவம் முகம் துக்ககரமனது. இந்த விஷயம் என்னுடைய மனதை வருத்துகிறது. இப்பொதெல்லாம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகி உள்ளது. 12 வயதிற்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை தூக்கிலிடும் வகையில் சட்ட திருத்தம் வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய இருக்கிறேன்'' என்றுள்ளார்.

  இந்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் குரல் கொடுத்துள்ள நிலையில், இவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  We need the death penalty for child rape asks, Maneka Gandhi in Kashmiri girl case. An 8-years old Kashmiri Muslim girl brutally raped and killed by 7 Hindutuva groups, in which 4 of them are police. BJP keeping their bad role in this issue. Kashmir girl child has killed inside a Hindu temple, she has been tortured for 5 days.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற