காவிரி வழக்கின் தீர்ப்பை தமிழகம் ஏற்கக்கூடாது.. திருமாவளவன் பேட்டி

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழகம் ஏற்கக்கூடாது என்று திருமாவளவன் பேட்டி அளித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழகம் ஏற்கக்கூடாது என்று திருமாவளவன் பேட்டி அளித்து இருக்கிறார்.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

We should not accept the Cauvery verdict says Thol. Thirumavalavan

தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.

தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைவாக கிடைக்கும். கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு.

இதுகுறித்து தற்போது தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் '' காவிரி வழக்கில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நீதியின் பெயரால் தமிழகத்திற்கு அநீதி இழைத்துள்ளார்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் ''குறைபாடுள்ள கண்ணுக்கு சிகிச்சை பெறச்சென்றால் மற்றொரு கண்ணையும் குருடாக்கி உள்ளார்கள். காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழகம் ஏற்கக்கூடாது '' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+