ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்: சோனியா காந்தி
டெல்லி: ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம் என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி கேரளா, அஸ்ஸாம் மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது காங்கிரஸ், தமிழகம், மேற்கு வங்கத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிலான வெற்றியை காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, சட்டசபை தேர்தல் நடந்த தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மக்களின் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம்.
இந்த தேர்தலில் நம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய வாக்காளர்கள் மற்றும் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மையை அளித்த புதுச்சேரி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்கள் தோல்விக்கான காரணங்கள் மீது சுயபரிசோதனை செய்வதுடன், அதை சரிசெய்து பொதுமக்களுக்கு புதியவேகத்துடன் சேவை செய்வோம். வெற்றி பெற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு எனது வாழ்த்துக்களை வழங்குகிறேன். இவர்கள், நல்லாட்சி மற்றும் வளர்ச்சியை தொடர்ந்து வழங்குவதை தங்கள் முக்கியக் அரசியல் குறிக்கோளாக இருக்கட்டும். எனத் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications