மே.வங்க சட்டசபை தேர்தல்: நாளை 6-ம் கட்ட வாக்குப் பதிவு- 43 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நாளை 6-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப் பதிவின் போது வன்முறை சம்பவங்கள் நிகழாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்க சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றன. இதில் இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

வன்முறை
4-ம் கட்ட வாக்குப் பதிவின் போது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் பலியாகினர். 5-ம் கட்ட வாக்குப் பதிவின் போதும் பல இடங்களில் வன்முறை வெடித்தது.

நாளை தேர்தல்
இந்த நிலையில் நாளை 6-ம் கட்ட வாக்குப் பதிவாக 43 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும். 6-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 306 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 27 பேர் பெண்கள்.

14,480 வாக்கு சாவடிகள்
6-ம் கட்ட வாக்குப் பதிவானது 14,480 வாக்குச் சாவடிகளில் நடைபெறும். மொத்தம் 1.03 கோடி வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். 43 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மோதுகின்றன. சிபிஎம் 23; காங்கிரஸ் 12; பார்வர்டு பிளாக்-4 சிபிஐ- 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

பலத்த பாதுகாப்பு
தற்போது கொரோனா பரவல் அதி உச்சத்தில் உள்ள நிலையில் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் கொரோனா கால கட்டுப்பாடுகள் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டுள்ளன. சமூக இடைவெளியுடன் வாக்காளர்கள் வாக்களிக்கவும் வன்முறைகள் இல்லாமல் தேர்தல் நடைபெறவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications