தடை பற்றிய தகவல் வெளியாகும் முன்பே, வங்கியில் கோடிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்ததா மே.வங்க பாஜக?
கொல்கத்தா: ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பதற்கு முன்பே மே.வங்க பாஜக 3 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
500,1000 ரூபாய் நோட்டுகள் என அறிவிப்பதற்கு முன்பே அந்த செய்தியை பா.ஜ.க தனது நண்பர்களுக்கு ரகசியமாக தெரிவித்து விட்டதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் மோடியின் ரூபாய் நோட்டு குறித்து அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பே , மேற்கு வங்க பாஜக 3 கோடி ரூபாயை வங்கியில் செலுத்தியதாகவும், அறிவிப்பு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 40 லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்ததாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஜனசக்தி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை இந்தியன் வங்கி உறுதி செய்துள்ளதாகவும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 8ஆம் தேதி பிற்பகல் பாஜக வங்கி கணக்குக்கு (எண் 554510034 ) முதற்கட்டமாக 60 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டதாக கூறியுள்ளது.
இதைத்தொடர்ந்து மோடி தொலைக்காட்சிகளில் பேசுவதற்கு முன்பாக 8 மணியளவில் இரண்டாம் கட்டமாக 40 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் அவை முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என்றும் கூறும் ஜனசக்தி, 8 மணி வரை வங்கி எப்படி திறந்திருந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் நவம்பர் ஒன்றாம் அந்தக் கணக்கில் 75 லட்சம் ரூபாயும் 5ஆம் தேதி ஒன்றேகால் கோடி ரூபாயும் டெபாசிட் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பை பாஜகவினர் முன்கூட்டியே தெரிந்திருந்ததால் தான் கறுப்பு பணத்தை வெள்ளையாக்க வங்கியில் செலுத்தியுள்ளனர் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சூரிய காந்த மிஷ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications