நந்திகிராமில் இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை.. திரிணாமுல் காங். பரபரப்பு.. நீடிக்கும் குழப்பம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு மமதா பானர்ஜி திடீரென தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்... ஆனால் இன்னும் வாக்கு எண்ணிக்கையே முடியவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் 216 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, பாஜக 73 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இங்கு திரிணாமுல் வெற்றிபெற்றாலும் அக்கட்சியின் தலைவர் முதல்வர் மமதா பானர்ஜி தோல்வி அடைந்துவிட்டார். நந்திகிராமில் முன்னாள் திரிணாமுல் அமைச்சர் மற்றும் தற்போதைய பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியிடம் இவர் தோல்வி அடைந்துவிட்டார்.

இழுபறி

இழுபறி

சுவேண்டு அதிகாரி தொடக்கத்தில் இருந்தே நந்திகிராம் முன்னிலை வகித்தார். முதலில் 2500, பின்னர் 3800, அதன்பின் 9800 வரை சுவேண்டு அதிகாரி முன்னிலை வகித்தார். இதனால் மமதா தோல்வி ஏறத்தாழ காலையிலேயே உறுதியானது.

உறுதி

உறுதி

ஆனால் அதன்பின் வேகமாக முன்னேறி வந்த மமதா 2000 வாக்குகள் முன்னிலை பெற்றார். பின் கடைசி சுற்றுக்கு முதல் சுற்றில் 6 வாக்குகள் பின்னடைவை சந்தித்த மமதா, கடைசி சுற்றில் 1200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

பின்னணி

பின்னணி

ஆனால் ஒரு மணி நேரத்தில் மீண்டும் 1622 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேண்டு அதிகாரி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். தற்போது சுவேண்டு 1967 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஒரு பக்கம் தோல்வியை ஒப்புக்கொண்ட மமதா தேர்தல் முடிவிற்கு எதிராக வழக்கு தொடுப்பேன் என்றுள்ளார்.

வழக்கு

வழக்கு

ஆனால் மமதா இப்படி கூறி வரும் நிலையில்.. நந்திகிராமில் இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை. முன் முடிவுகளுக்கு வர வேண்டாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் இப்படி சொல்வதால் மேலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது... இதனால் நந்திகிராமில் என்னதான் நடக்கிறது.. ஏன் இவ்வளவு குழப்பங்கள் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+