மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: வன்முறை குண்டர்கள்- கடும் நடவடிக்கை- ஆளுநர் கடும் எச்சரிக்கை!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வன்முறைகளில் குண்டர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என மாநில ஆளுநர் ஆனந்த போஸ் கடுமையாக எச்சரித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெற்றது. பஞ்சாயத்து சமிதிகள், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் 22 மாவட்டங்களில் 73,887 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வேட்பாளர்களாக சுமார் 2 லட்சம் பேர் போட்டியிட்டனர்.

லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்ற போது வன்முறைச் சம்பவங்கள் உச்சத்தை எட்டின.வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல், தீவைத்தல் என வன்முறைகள் தாண்டவமாடின. இத்தகைய வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று 650க்கும் மேற்பட்ட வாக்கு சாவடிகளில் மறுவாக்குப் பதிவும் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்றைய வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என மாநில ஆளுநர் ஆனந்த போஸ் கடுமையாக எச்சரித்துள்ளார். கண்ட்ரோல் ரூம்களில் உட்கார்ந்து கொண்டு வன்முறைக்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் குண்டர்களை இறக்கிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் ஆளுநர் ஆனந்த போஸ் கடுமையாக எச்சரித்துள்ளார். முன்னதாக டெல்லி சென்ற ஆளுநர் ஆனந்த போஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications