மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இப்போது திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் நேற்றைய தினம் தான் அங்கு திரிணாமுல் எம்பி அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் நடந்த நிலையில், இன்றைய தினம் மற்றொரு மூத்த எம்பியான கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரது மண்டை உடைக்கப்பட்ட சூழலில், ரத்தம் கொட்ட கொட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்த வீடியோ பகீர் கிளப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மூண்ட அரசியல் மோதல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை காரணமாக ஏற்கனவே பலர் உயிரிழந்து இருந்தனர். தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் போதிலும், அங்கு முழுமையாக அமைதி திரும்பவில்லை.

அபிஷேக் பானர்ஜி
நேற்றைய தினம் தேர்தலுக்கு பிந்தைய முடிவுகளால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு திரிணாமுல் எம்பியும் மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி நேரில் சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த சிலர் திடீரென அபிஷேக் பானர்ஜி மீது கொடூரமான தாக்குதலை நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே மற்றொரு திரிணாமுல் எம்பியான கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல் நடந்துள்ளது.
கல்யாண் பானர்ஜி
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சண்டிதாலா காவல் நிலையத்திற்கு வெளியே இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மூத்த திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜி கொடூரமாகத் தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கூட்டியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட தங்களது கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, சண்டிதாலா போலீஸ் ஸ்டேஷனில் மனு ஒன்றைச் சமர்ப்பிப்பதற்காக எம்பி கல்யாண் பானர்ஜி தலைமையில் திரிணாமுல் தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.
என்ன நடந்தது!
ஊர்வலமாக வந்து அவர்கள் மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டர்கள், மனு கொடுக்க வந்த திரிணாமுல் தொண்டர்களை பார்த்து "திருடர்கள்... திருடர்கள்..." என ஆக்ரோஷமாக முழக்கமிட்டு வம்புக்கு இழுத்தனர். அடுத்த சில நிமிடங்களில், இருதரப்புக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றி, அது ஒரு பயங்கரமான வன்முறை மோதலாக மாறியது.
இந்த அதிரடி மோதலின் போது, கூட்ட நெரிசலில் புகுந்த மர்ம நபர்கள் எம்பி கல்யாண் பானர்ஜியை குறிவைத்துத் தாக்கினர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வன்முறைக்குப் பின், தலையில் ரத்தம் கொட்ட.. அதை கைக் குட்டையை வைத்துக் கொண்டே செய்தியாளர்களிடம் பேசிய எம்பி கல்யாண் பானர்ஜி உடைந்த குரலில் கொந்தளித்தார்.
தாக்குதல்
அங்கு பேசிய அவர், "காவல் நிலையத்திற்குள் நான் முறைப்படி மனு கொடுக்கச் சென்ற போது, திட்டமிட்டே என் மீது குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். தங்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி அமைதியான முறையில் போராட வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த அக்ரோஷமான தாக்குதல் முற்றிலும் கண்டிக்கத்தக்கது!" என்றார்.
நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, சம்பவ இடத்திற்கு உள்ளூர் போலீசாரும், மத்தியப் பாதுகாப்புப் படைகளும் குவிக்கப்பட்டநர். கலவரக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது
தொடரும் வன்முறை
மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையிலான புதிய அரசு அமைந்ததில் இருந்தே, திரிணாமுல் பிரமுகர்களை குறிவைத்து கைதுகளும் புல்டோசர் ஆக்ஷன்களும் பாய்ந்து வருகிறது. இப்போது ஒரு படி மேலே போய், மனு கொடுக்க வந்த எம்பியின் மண்டையை உடைக்கும் அளவுக்குப் பாஜகவினர் வீதியில் இறங்கியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications