41 கோடியாம்! எண்ணி எண்ணி டயர்டான அமலாக்கத்துறை அதிகாரிகள்! பதற வைத்த பார்த்தா! அதிர வைத்த அர்பிதா..!
கொல்கத்தா : ஆசிரியர் பணி நியமனம் மோசடி தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொண்ட போது ஏற்கனவே 20 கோடி பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது மேலும் 21 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 3 பெரிய பணம் எண்ணும் இயந்திரங்கள் மூலம் எண்ணும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விவகாரம் பூதகாரமாக வெடித்த நிலையில் இந்த மோசடி தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் வீடுகளில் கடந்த வாரம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பார்த்தா சாட்டர்ஜி
அந்த சோதனையில் தற்போது வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் கூட கிடைக்காத 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்ளில் 21 கோடி ரொக்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் அர்பிதா முகர்ஜி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அமலாக்கத்துறை அதிரடி
இருவரையும் 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கொல்கத்தா நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி ஆகியோரை வருகிற ஆகஸ்ட் 3- ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. இதனிடையே தற்போது, சோதனையில் மேலும் 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணத்தை எண்ணும் பணி
நேற்று மதியம் முதல் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணியை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடங்கிய நிலையில், 3 பெரிய எண்ணும் இயந்திரங்கள் மூலம் எண்ணப்பட்ட நிலையில் 20 கோடி இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. பணி தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அர்பிதாவின் தெற்கு கொல்கத்தா வீட்டில் மீட்கப்பட்ட 22 கோடி பணத்தை விட இது அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய இயந்திரங்கள்
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பணம் எண்ணும் இயந்திரங்கள் பொதுவாக வங்கிகளில் பெரும் அளவில் டெபாசிட் செய்யப்படும் ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நிமிடத்திற்கு 4 ஆயிரம் நோட்டுகள் வரை இதில் எண்ணலாம். 2000 ரூபாய் நோட்டுகளை எண்ணினால் நிமிடத்திற்கு 8 லட்சம் ரூபாய் வரை எண்ணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

41 கோடி பணம்
ஒரே இரவில் எண்ணும் பணி முடிவடைந்து விடும் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணி முடிவடைந்தவுடன் பணத்தை எடுத்துச் செல்ல லாரிகள் வந்துள்ளன.மேலும் அந்த பணத்தை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல 20 டிரங்க் பெட்டிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. இதுவரை 41 கோடி பணம் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications