Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லடாக் வீதிகளில் இறங்கிய Gen Z இளைஞர்கள்.. ஒரே நாளில் உச்சத்திற்கு போன வன்முறை! 5 பாயிண்டுகள்

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டம் மிகப் பெரிய வன்முறையாக வெடித்தது. அதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதற்கிடையே இந்த வன்முறை எப்படி ஏற்பட்டது.. இதற்கு என்ன காரணம்.. இந்த வன்முறை ஏன் தேசியளவில் பேசுபொருளானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக இருக்கிறது. இதற்கிடையே லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி நடந்த போராட்டத்தில் திடீரென நேற்று வன்முறை வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இந்த வன்முறை போராட்டம் தொடர்பாக 5 பாயிண்டுகள் பார்க்கலாம்.

What are the reason for Leh Protests Gen Z Fuels Ladakh Statehood explained in five points

1. லடாக் போராட்டம் காரணம்

லடாக்கில் காலச்சார ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. லடாக் பகுதியை இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.

இந்தப் போராட்டம் தொடர்பாக வாங்சுக் தனது ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், "இளைஞர்களின் கோபம்தான் அவர்களை வீதிகளுக்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்களுக்கு வேலை இல்லை. ஒன்றன் பின் ஒன்றாகப் பல்வேறு காரணங்களைச் சொல்லி வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். லடாக்கின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இது Gen Z தலைமுறையின் புரட்சி. அதேநேரம் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்; அது எங்கள் ஐந்து ஆண்டு கால உழைப்பை வீணடித்துவிடும். இது எங்கள் வழி இல்லை" என்று கூறியிருந்தார்.

2.போராட்டத்தை நடத்தியது யார்

லே உச்ச அமைப்பு (Leh Apex Body) தலைமையிலேயே போராட்டம் நடந்தது. இந்த அமைப்பானது பல்வேறு மத, சமூக மற்றும் அரசியல் குழுக்களின் ஒரு கூட்டணியாகும். லடாக் மக்களின் உரிமைகளுக்காக நீண்டகாலமாகக் குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், இந்த அமைப்பின் உறுப்பினராக உள்ளார். இந்த சோனம் வாங்சுக் தான் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.

3. பாஜக குற்றச்சாட்டு

லடாக்கின் லே பகுதியில் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைக்குக் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பாஜக தலைவர் அமித் மால்வியா வன்முறை தொடர்பான போட்டோக்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து காங்கிரஸை குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர், "லடாக்கில் கலவரத்தில் ஈடுபட்ட நபர், லே வார்டின் காங்கிரஸ் கவுன்சிலர் புன்ட்சோக் ஸ்டான்சின் செபாக் ஆவார். இவர் தான் வன்முறையைத் தூண்டிவிட்டு, பாஜக அலுவலகத்தைக் குறிவைத்து நடந்த வன்முறைக்குக் காரணமாக இருக்கிறார். இதைத் தான் ராகுல் காந்திக்கு எதிர்பார்க்கிறாரா?" என்று சாடியுள்ளார்.

4. ஜென் Z போராட்டம்

இந்தப் போராட்டங்களில் கவனிக்க வைக்கும் விஷயமே இதில் இளைஞர்கள், குறிப்பாக GEN Z தலைமுறையினர் அதிகம் பங்கேற்றிருந்தனர். சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாகப் பரவலான கருத்துகளைப் பார்க்க முடிகிறது. நெட்டிசன் ஒருவர் "ஜென் Z தலைமுறையினர் லடாக் வீதிகளில் இறங்கியுள்ளனர்" என்ற பதிவிட்டு லேவில் இருந்து ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். லடாக்கில் ஜென் Z போராட்டக்காரர்களே பாஜக அலுவலகத்திற்கு தீ வைத்ததாக இன்னொரு நபர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நேபாளத்தில் ஜென் Z போராட்டம் தான் மிகப் பெரிய வன்முறையாக வெடித்தது. நேபாளத்தைத் தொடர்ந்து பெரு உள்ளிட்ட சில நாட்களிலும் கூட ஜென் Z போராட்டம் பெரிதாக வெடித்தது. இந்தச் சூழலில் தான் லடாக்கிலும் கிட்டத்தட்ட அதேபோல ஜென் Z போராட்டம் வெடித்துள்ளது. இதுவே மக்களிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதேநேரம் போராட்டம் இப்போது வரை கட்டுக்குள் தான் இருக்கிறது.

5. மத்திய அரசு குற்றச்சாட்டு

இதற்கிடையே இந்தப் வன்முறைக்கு சோனம் வாங்சுக் தான் காரணம் என மத்திய அரசு கடுமையாக சாடியுள்ளது. லடாக் போராட்டம் வன்முறையாக மாறியதற்குக் காரணம் அவரே என்று அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்த வன்முறைகளில் நான்கு பேர் உயிரிழந்தனர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சிஆர்பிஎப் படையினர் காயமடைந்ததாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

வாங்சுக் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் அதுவே இளைஞர்களைத் தூண்டிவிட்டதாகவும் மத்திய அரசு கூறுகிறது. வாங்சுக்கின் பேச்சுக்களும், போராட்டங்களும் கலவரத்தைத் தூண்டியதாகவும், இதனால் பாஜக மற்றும் அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டதாகவும், சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+