கொல்கத்தா கேஸ்.. பெரிய ட்விஸ்ட் இதுதான்.. டிஎன்ஏ, தடயவியல் சோதனையில் வந்த திடுக் முடிவு! என்ன?
கொல்கத்தா: ஆகஸ்ட் 9-ம் தேதி கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சஞ்சய் ராய்க்கு தொடர்பு இருப்பதாக டிஎன்ஏ மற்றும் தடயவியல் அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.
இந்த ஆய்வின் முடிவில் வேறு யாருக்கும் இதில் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை என்பதை டிஎன்ஏ மற்றும் தடயவியல் அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துடன் கலந்தாலோசிக்கும். (AIIMS) நிபுணர்கள் இறுதிக் கருத்துக்கு இந்த ஆய்வு அறிக்கை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதுவரை செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பலாத்காரம் மற்றும் கொலையில் வேறு எந்த நபருக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சிபிஐ விசாரணையில் எந்த விதமான ஓட்டையும் இருக்க கூடாது என்ற நினைப்பதாக கூறப்படுகிறது. எனவே டிஎன்ஏ மற்றும் தடயவியல் அறிக்கைகள் குறித்து எய்ம்ஸ் நிபுணர்களிடம் இறுதிக் கருத்து கேட்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அந்த கும்பல் பலாத்காரம் செய்ததாக முதலில் குறிப்பிட்டனர். ஆனால் தற்போது வெளியாகி உள்ள டிஎன்ஏ மற்றும் தடயவியல் அறிக்கைகள் இது கும்பல் பலாத்காரம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளன.
விசாரணை: ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (ஆர்ஜிகேஎம்சிஎச்) முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம், பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நேற்று இரவு இரண்டாவது சுற்று பாலிகிராஃப் சோதனையை அவரிடமும் மேற்கொண்டது.
மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் (சிஎஃப்எஸ்எல்) குழுவால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் பல அதிர வைக்கும் உண்மைகள் வெளியே வரலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த வழக்கில் சஞ்சய் ராயிடம் ஏற்கனவே இந்த சோதனை நடத்தப்பட்டு விட்டது. ஆனால் சந்திப் கோஷிடம் நடத்தப்படவில்லை.
சந்திப் கோஷ் இந்த வழக்கில் நேரடியாக தொடர்பு கொண்டு இருக்கலாம். அவரும் இந்த விவகாரத்தில் தவறு செய்து இருக்கலாம் என்று புகார்கள் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் அவரிடம் நடத்தப்பட்ட சோதனை கண்டிப்பாக பல முக்கியமான திருப்பங்களை இந்த வழக்கில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன நடந்தது?: கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த சஞ்சய் ராய், அதே நாள் இரவில் வேறு ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கியதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. சிபிஐ விசாரணையில் இது தொடர்பாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். அதாவது மருத்துவரை பலாத்காரம் செய்யும் முன் அதே நாள் இரவு சஞ்சய் ராய் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
விசாரணையின் போது, சஞ்சய் ராய் குற்றம் நடந்த இரவில் தான் செய்ததை எல்லாம் விவரித்தார். நகரத்தில் இரண்டு சிவப்பு விளக்கு பகுதிகளுக்குச் சென்றதை ஒப்புக்கொண்டார், ஆனால் உடலுறவு கொள்ளவில்லை.
அதேபோல் வருகிற வழியில் தெருவில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதையும் அவர் ஒப்புக்கொண்டார்,. இது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கூடுதலாக, ராய் தனது காதலியுடன் வீடியோ கால் செய்ததாகவும், அவளிடம் நிர்வாண புகைப்படங்களைக் கேட்டதாகவும் தெரிவித்தார். அதற்கு அவர் புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications