பெண்கள் நிர்வாண ஊர்வலம்: போலீஸ் கஸ்டடியை மீறி அட்டூழியம்! மணிப்பூரில் உண்மையில் இதுதான்! கடும் ஷாக்
இம்பால்: மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கூறும் நிலையில் தான் உண்மையில் மணிப்பூரில் நடந்தது ஷாக் சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்த மாநிலத்தில் குக்கி எனும் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். அதேபோல் மைத்தேயி பிரிவு மக்களும் உள்ளனர். இந்நிலையில் தான் மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதற்கு குக்கி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் பிரச்சனை இருந்து வந்தது. கடந்த மே மாதம் 3ம் தேதி இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக உருமாறியது. அன்று முதல் கடந்த இரண்டரை மாதமாக மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது.
இந்த வன்முறையில் துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. இதனால் ஏராளமானவர்கள் பலியான நிலையில் நிறையபேர் வீடுகளை இழந்து தவிக்க தொடங்கினர். தொடர் பதற்றத்தால் அங்கிருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில் சுமார் 140க்கும் அதிகமானவர்கள் வன்முறையில் இறந்துள்ளனர்.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில் இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டதோடு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மத்திய பாதுகாப்பு படையினர், மாநில போலீசார் உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இருப்பினும் இன்னும் வன்முறை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.
இந்நிலையில் தான் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் மாநிலம் பைனோம் கிராமத்தில் உள்ள வீடுகளை எரித்த கும்பல் அதிலிருந்து தப்பியோடிய 2 ஆண்கள், 3 பெண்கள் என ஐந்து பேரை தாக்கி உள்ளனர். இதில் ஒரு ஆண் இறந்த நிலையில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். மேலும் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல், இன்னொரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது.
மேலும் 2 பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தான் சம்பவம் குறித்து மணிப்பூர் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இதுபற்றி மணிப்பூர் போலீசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். அது ஷாக்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த சம்பவம் மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் நடந்துள்ளது. பைனோம் கிராமத்தில் ஏற்பட்ட மோதலில் 2 ஆண்கள், 3 பெண்களை 800 முதல் 1000 பேர் கொண்ட கும்பல் தாக்கி உள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் வனப்பகுதிக்குள் ஓடினர். இவர்கள் 5 பேரையும் நோங்போக் செக்மாய் போலீசார் மீட்டனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வழியில் வந்த கும்பல் அவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்த 5 பேரையும் தாக்கினர். பெண்களின் ஆடைகளை அவித்து நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்றனர். இதில் 56 வயது நிரம்பிய ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு ஆண் தப்பிய நிலையில் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட பெண்களுக்கு மக்களின் உதவியுடன் தப்பினர். இருப்பினும் ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மே மாதம் 4ம் தேதி மதியம் 3 மணிக்கு நடந்துள்ளது. இதுபற்றி அந்த கிராமத்தின் தலைவர் போலீசில் புகார் செய்தார். கடந்த மாதம் 21ம் தேதி புகார் வந்தது. இதுதொடர்பாக தவ்பாலின் நோங்போக் செக்மா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைநடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவருக்கு 20 வயதும், இன்னொருவருக்கும் 40 வயதும் இருக்கும். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்'' என தெரிவித்துள்ளனர்.
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications