பணம்.. இந்திய மக்கள் காட்டிய பொறுமை, தியாகம் உலகுக்கே முன் உதாரணம்: மோடி புகழாரம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில், வங்கியிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்க மக்கள் பட்ட கஷ்டங்களுக்கு நன்றி தெரிவித்து பெருமிதம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிரான மனநிலையில் உள்ளார்கள். தீமையை அழிக்க மக்கள் சபதம் ஏற்றால் விளைவு நன்றாக இருக்கும் என்பதற்கு நமது நாடு உதாரணம். நவம்பருக்கு பின் புதிய சவால்கள் மக்களுக்கு காத்திருந்தன. ஆனால் ஊழல் பிரச்சனைகளை அகற்ற போராடுகிறோம் என்ற உணர்வு அனைவரையும் ஒன்றிணைத்தது.

ஊழலை ஒழிக்கவும் ஏழைகள் நலம் பெறவுமே பண மதிப்பிழப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், நேர்மை மரபு காப்பாற்றப்பட்டுள்ளது. ஊழலை ஒழிக்கும் மனநிலையில் மக்கள் உள்ளனர். கறுப்பு பணம், கள்ளச்சந்தை, விலைவாசியால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
கறுப்பு பண ஒழிப்பால் நீண்ட நாட்களுக்கு பயன் கிடைக்கும். எனவேதான், பணமதிப்பிழப்புக்கு நாட்டு மக்கள் ஆதரவு தந்து வருகிறார்கள். பணப் பற்றாக்குறை கிராமங்களில் விரைவில் சரி செய்யப்படும். வங்கிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும்
பணபரிமாற்றத்தை மக்கள் நிறுத்த வேண்டும். டிஜிட்டலுக்கு மாற வேண்டும். மக்களின் பணம் வங்கிக்கு வந்தால் நாட்டுக்கு வளர்ச்சி கிடைக்கும். காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்திருந்தால் மக்களை பாராட்டுவர். ஏழைகளை முன்னேற்ற இதுபோன்ற நடவடிக்கை தேவை. இந்தியர்கள் தியாகமும், பொறுமையும் உலகிற்கே ஒரு உதாரணம். இவ்வாறு மோடி புகழ்ந்துரைத்தார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications