பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.. மக்களிடம் கருத்து கேட்கிறது நிதியமைச்சகம்

பட்ஜெட் குறித்து பொது மக்களிடம் மத்திய நிதியமைச்சகலம் கருத்துக் கேட்கப்பட்டு வருகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்களிடம் மத்திய நிதியமைச்சகம் கருத்து கேட்டு வருகிறது.

மத்திய அரசின் பொது பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் குறித்து மத்திய நிதியமைச்சகம் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டு வருகிறது.

What It Should Focus On In Budget 2017 - finance minstery

பொது பட்ஜெட்டில் எந்தத் துறைக்கு அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும். எந்தத் துறைக்கு எந்த அளவு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களைப் பொதுமக்களிடம் மத்திய நிதியமைச்சம் கேட்டு வருகிறது.

மத்திய அரசின் Ministry of Finance என்ற டுவிட்டர் பக்கத்தில், பொது மக்கள் தங்களுடையக் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

விவசாயம், உற்பத்தி, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என 4 துறைகளை கொடுத்து அவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களுடையக் கருத்துகளை வரும் 6 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+