நடுநடுங்க செய்யும் "மர்ம நோய்".. இதுதான் அறிகுறிகள்.. அசாம், உ.பி.யில் பரவுகிறது ஸ்க்ரப் டைபஸ்..!
மர்மநோய் அசாம், உபியில் பரவ ஆரம்பித்துள்ளது
கவுகாத்தி: அசாம் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பரவி வரும் ஸ்க்ரப் டைபஸ் எனும் புதிய வைரஸ் மக்களிடையே அளவுக்கு அதிகமான அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.. இது எந்த மாதிரியான வைரஸ் என்பதை கண்டுபிடிக்க லட்சக்கணக்கான மருத்துவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அதற்குள் அந்த வைரஸ் அடுத்த நிலைக்கு உருமாறி சென்று கொண்டே இருக்கிறது.. இந்த வைரஸின் உருமாறிய வடிவங்கள் வேகமாக இன்னொரு அலைகளை ஏற்படுத்தியும் வருகிறது.. இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

குழந்தைகள்
மேலும் ஒரு புதிய வைரஸ் வந்துள்ளதாம்.. குறிப்பாக, உத்தரப் பிரதேசம், அசாம் மாநிலங்களில் இந்த 2 வாரங்களாகவே இந்த புது வைரஸ்தான் மக்களை கதிகலங்க வைத்து வருகிறது.. அந்த மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இந்த 2 வாரங்களாகவே மர்ம காய்ச்சல் வந்துள்ளது.. இது என்ன காய்ச்சல் என்று கண்டுபிடிப்பதற்கு முன்னமேயே அவர்கள் இறந்துவிடும் சோகமும் தொடர்கிறது.

பாக்டீரியா
மதுரா, மெயின்புரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில், இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்... மதுராவில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை டெங்கு அல்லது கொரோனா வைரஸின் வேரியண்டுகளாக இருக்கும் என்று டாக்டர்கள் சந்தேகப்பட்டனர்.. அதற்காக டெஸ்ட்டுகளும் மேற்கொண்டனர்.. ஆனால், அந்த வைரஸ் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

காய்ச்சல்
அதே சமயம், இந்த வைரஸ் பெயர் ஸ்க்ரப் வைரஸ் என்கிறார்கள்.. மைட் போர்ட் ரிக்கெட்டிசியோசிஸ் என்றும் சொல்கிறார்கள். ஓரியன்டியா சுட்சுகாமுஷி (Orientia tsutsugamushi) என்ற பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறதாம்.. ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்றுள்ள லார்வா பூச்சிகள் கடிப்பதன் மூலம், மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது..

இதயம்
இந்த வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு கடுமையான காய்ச்சல் இருக்கும், தலைவலி, உடம்பு வலிகள் அதிகம் ஏற்படும்.. இந்த நோயின் தாக்கம் அதிகமாகி விட்டால், நிமோனிடிஸ், மூளைக்காய்ச்சல், மனநிலை குழப்பம், கோமா, இதய செயலிழப்பு போன்றவை ஏற்படுமாம். இப்படி ஒரு ஆபத்தான ஸ்க்ரப் வைரஸ் பரவலுக்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தீர்வு
ஆனால், ஸ்க்ரப் டைபஸ் பாதிக்கப்பட்டவருக்கு டாக்ஸிசைக்ளின் என்ற மருந்து மூலம் சிகிச்சை தரப்பட வேண்டும் என்று மத்திய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டுமில்லை, இந்த ஸ்க்ரப் டைபஸ் வைரஸ் இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் கிராமப் புற பகுதிகளிலும் பரவி உள்ளதாம்.... இதற்கு ஒரே தீர்வு, தலை முதல் கால் வரை மூடியே இருக்க வேண்டும்... முக்கியமாக கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் கடிபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications