For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாட்ஸ்ஆப் போலி வீடியோவால் திருநங்கையை அடித்துக் கொன்ற மக்கள்

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    திருநங்கையை அடித்துக் கொன்ற மக்கள்-வீடியோ

    ஹைதராபாத்: வாட்ஸ்ஆப்பில் பரவிய போலி வீடியோவால் 52 வயது நபரை மக்கள் அடித்துக் கொன்றுள்ளனர்.

    இவர் குழந்தையை கடத்துபவர் என்று கூறி வாட்ஸ்ஆப்பில் போலி வீடியோக்கள் வலம் வருகின்றன. அந்த வீடியோக்களை நம்பி மக்கள் அப்பாவிகளை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்துள்ளது.

    WhatsApp fake video claims the life of a transgender

    ஹைதராபாத்தில் உள்ள சந்திராயன்குட்டா பகுதியில் ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏதாவது உதவி செய்யுமாறு கேட்டு திருநங்கைகள் வந்துள்ளனர். சந்திரய்யா, சாமி, நரசிம்மா ஆகிய திருநங்கைகளை பார்த்த மக்கள் அவர்கள் குழந்தைகளை கடத்துபவர்கள் என்று தவறாக நினைத்து அடித்து நொறுக்கியுள்ளனர்.

    இதில் சந்திரய்யா பரிதாபமாக பலியானார். மற்ற இருவரை போலீசார் மீட்டு உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குழந்தைகளை கடத்தும் கும்பல் ஒன்று தெலுங்கானாவில் செயல்படுவதாக பரவிய வாட்ஸ்ஆப் வீடியோவால் சந்திரய்யாவின் உயிர் போனது.

    முன்னதாக நிஜாமாபாத், யதாத்ரி மற்றும் ஹைதராபாத் அருகே உள்ள இடம் ஆகியவற்றில் வாட்ஸ்ஆப் போலி வீடியோக்களால் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.

    English summary
    A 52-year-old transgender was beaten to death in Hyderabad because of a fake video on whatsapp saying that gang of kidnappers are in the state of Telangana.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X