ராகுல் பாதுகாப்பாக உள்ளார், சாதனை நாயகனாக திரும்பி வருவார்: சல்மான் குர்ஷித்
லக்னோ: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எங்கிருந்தாலும் பாதுகாப்பாக உள்ளார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி விடுப்பில் சென்றவர் இன்னும் திரும்பி வரவில்லை. இரண்டு முறை தனது விடுப்பை நீட்டித்துள்ளார். ராகுல் திரும்பி வருகையில் மனைவியுடன் வருவார் என்று வதந்தி பரவியது.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சல்மான் குர்ஷித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
ராகுலை பற்றி எதிர்கட்சியினர் கவலைப்படத் தேவையில்லை. அவர் தான் காங்கிரஸின் கமாண்டர். அவர் எப்பொழுது திரும்பி வர வேண்டுமோ அப்பொழுது இந்த உலகமே பார்க்கும் அளவுக்கு சிறப்பான சாதனைகளுடன் வருவார்.
ராகுல் எங்கு இருக்கிறார் என்று நினைப்பதை விட்டுவிட்டு காலம் கடந்து பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் எதிர்கட்சியினர் கவனம் செலுத்த வேண்டும்.
கட்சி பொறுப்பை பிரியங்கா காந்தி வாத்ராவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறபவர்கள் நம் நாட்டிலேயே அண்ணன்-தங்கை உறவுக்கு உதராணமாக அவர்கள் இருப்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அடுத்த தலைவர் யார் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications