தீவிரவாதிகள் எங்க போனாலும் விடமாட்டோம்.. தேடிப்பிடிச்சு அழிப்போம்.. ஆவேசமடைந்த பிரதமர் மோடி
யவத்மால்:புல்வாமாவில் தாக்குதல் நடத்தியவர்கள் எங்கு ஒளிந்து கொண்டாலும்.... அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி ஆவேசமாக பேசியிருக்கிறார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டை மட்டுமின்றி உலகையே உலுக்கி உள்ளது. தாக்குதலை செய்தவர்கள் நிச்சயம் பழி தீர்க்கப்படுவார்கள் என மத்திய அரசு சூளுரைத்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் யவத்மால் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் மிக மோசமான ஒரு செயலை செய்து விட்டார்கள். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 2 வீரர்களும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர்.
உங்களின் கோபம் புரிகிறது. நாடு முழுவதுமே கடும் சோகத்தால் மக்கள் ஆழ்ந்துள்ளனர். வீரர்களின் தியாகம் வீண் போகாது. தீவிரவாதிகள் எங்கே பதுங்கி இருந்தாலும் இனிமேல் தப்பிக்க முடியாது.
ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறோம். தீவிரவாதிகளின் தலைவிதியை இனிமேல் ராணுவ வீரர்கள் முடிவு செய்வார்கள். தீவிரவாதிகள் இனிமேல் தப்பித்துச் செல்ல முடியாது. அவர்கள் எங்கே ஒளிந்துகொள்ள முயற்சித்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications