தேனிலவு கொலை! யார் இந்த சஞ்சய் வர்மா? சோனம் செய்த தில்லு முல்லுவை பாருங்க!
இந்தூர்: மேகாலயாவில் தேனிலவுக்கு சென்ற இடத்தில் இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியை மனைவியே கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவத்தில் மனைவி சோனம், தொடர்ச்சியாக சஞ்சய் வர்மா என்பவருக்கு போன் செய்துள்ளது தெரியவந்தது. யார் அவர், சோனத்திற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்பதை பார்க்கலாம்.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை , கிட்டதட்ட 39 நாட்களில் சோனம், சஞ்சய் வர்மாவுடன் 234 முறை தொலைபேசியில் பேசியுள்ளார். அதிலும் அந்த அழைப்புகள் எல்லாம் மணிக்கணக்கில் பேசியுள்ளனர்.

ஒவ்வொரு அழைப்பும் குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை இருந்துள்ளது. இதுகுறித்து தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த போலீஸார், யார் அந்த சஞ்சய் வர்மா என்பதை அறிய விசாரணை செய்தனர்.
கடைசியாக சஞ்சய் வர்மாவின் வாட்ஸ் ஆப் last seen லிஸ்டில் ஜூன் 8ஆம் தேதி என இருந்தது. அன்றுதான் ராஜா ரகுவன்ஷியை, சோனம் கூலிப்படையை ஏவி கொன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சோனமும் சரணடைந்தார்.
சஞ்சய் வர்மா
இந்த நிலையில் சஞ்சய் வர்மா என்பவரின் பெயர் இந்த வழக்கில் அடிபட்டது. இது குறித்து சோனத்தின் சகோதரரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், சஞ்சய் வர்மா யாரென்றே தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ தெரியாது என சொன்னார்.
யார் இந்த சஞ்சய்
சஞ்சய் வர்மா என்ற பெயரில்தான் ராஜ்குஷ்வாகா (சோனத்தின் காதலன்) பயன்படுத்தி வந்த மொபைல் எண்ணை சோனம் பதிவு செய்திருந்தார். இதன் மூலம் யாருக்கும் தங்கள் மீது சந்தேகம் வரக் கூடாது என்பதற்காகவே இதை செய்துள்ளார்.
ட்ரூ காலரில் என்ன பெயர்
ட்ரூ காலரில் சஞ்சய் வர்மா என குறிப்பிட்டிருந்தாலும் , சிம் கார்டு ராஜ்குஷ்வாகா பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு வேறு நோக்கம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தில்லு முல்லு
ராஜா குஷ்வாகா என பெயரை போனில் சேவ் செய்தால், சோனத்தின் பெற்றோருக்கு தெரிந்து விடும் என்பதால் இது போன்ற தில்லு முல்லை சோனம் செய்திருக்கிறார்.
நடந்தது என்ன
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்திற்கும் (25) கடந்த மே 11 ஆம் தேதி திருமணம் நடந்தது. இருவரும் தேனிலவுக்காக கடந்த மே 23 ஆம் தேதி சென்ற போது அவர்களுடனான போன் இணைப்பு கிடைக்கவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.
ராஜா ரகுவன்ஷியின் உடல்
இதையடுத்து ஜூன் 2 ஆம் தேதி மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய்சாவ்டாங் அருவி அருகே உள்ள பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்ஷியின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் காதலனுடன் செல்வதற்காக தனது கணவரை மனைவி சோனமே கூலிப்படையை ஏவி கொன்றதாக தெரியவந்தது.
எத்தனை பேர் கைது
இது தொடர்பாக சோனம், காதலர் ராஜ் குஷ்வாகா, ஆகாஷ் , விஷால், ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தினமும் சோனத்தின் தில்லுமுல்லுத்தனம் தெரிகிறது. ராஜா ரகுவன்ஷியை ஏற்கெனவே 3 முறை கொலை செய்ய சோனம் முயற்சி செய்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications