மேட்டறே வேற.. ஜெயிச்சதுமே "மட்டன்" கடைக்கு போன பாஜக பிரபலம்.. அலறிய கடைக்கடைகள்.. கடைசியில பாருங்க
ஜெய்ப்பூர்: வெற்றி பெற்ற முதல்நாளே ஒரு அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறார் பாஜக எம்எல்ஏ.. இதைப்பார்த்து ராஜஸ்தான் மாநிலமே மிரண்டு போய்விட்டது.
இந்த முறை நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களின் வெற்றியானது பாஜகவை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.. தெலுங்கானா முடிவு எதிர்பார்த்தது என்றாலும், வடமாநிலங்களில் பாஜகவின் விஸ்வரூபம் அதிகரித்துள்ளதாகவே கணக்கிடப்படுகிறது. இந்த தேர்தலிலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வியூகத்தை பாஜக கையிலெடுத்திருந்தது.. முக்கியமாக சாதி அரசியல் கையில் எடுக்கப்பட்டது..

இதில் ராஜஸ்தானை பொறுத்தவரை, சாதி ரீதியில் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது
இந்த மாநிலத்தை பொறுத்தவரை ராஜ்புட் சமூகத்தில் 10 %, ஜெயின்கள் 8 %, ஜாட் சமூகத்தினர் 7-8 %, பிராமணர்கள் 7%, மீனா 6 சதவீதத்தினரும் உள்ளனர்..
இந்துக்கள்: மதஅடிப்படையில் பார்த்தால், 77.98 சதவீதம் இந்துக்களும், 17.91 சதவீதம் இஸ்லாமியர்களும், 2.67 சதவீதம் ஜெயின்களும் உள்ளனர். ஆனாலும், இந்த 30 வருடங்களில் பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள இம்மாநிலத்தை ஆண்டு வருகிறார்கள்... இத்தனைக்கும் பிராமணர்களை விட அதிகளவில் ஜாட் சமுதாயத்தினர் வசித்தாலும்கூட, இந்த சமுதாயத்தை சேர்ந்த யாருமே, முதல்வர் பதவியை அலங்கரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், தற்போது முடிந்த தேர்தலில், வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ஒருவர், மொத்த மாநிலத்தையும் தன்னுடைய ஒரே அறிவிப்பின்மூலம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இங்குள்ள ஹவாமஹால் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாலமுகுந்த் ஆச்சார்யா..
அசைவ உணவு: தேர்தலில் வெற்றி பெற்றதுமே, அடுத்தநாளே, கறிக்கடைக்கு போனார்.. தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து, தன்னுடைய தொகுதியில் இருக்கும், சாலையோர மட்டன், சிக்கன், என அசைவ உணவு கடைகளை உடனடியாக முட வேண்டும் என்று சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு கடைக்காரர்கள் அதிர்ந்துள்ளனர்.. ஆனாலும், கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தகராறு செய்திருக்கிறார்.
இதுபற்றி தகவலறிந்த போலீஸாரும், நகராட்சி நிர்வாகிகளும், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள்.. வியாபாரிகளுக்கு சாதகமாக பேசினார்கள்.. வியாபாரிகள் கடைகள் மூடுவதையும் தடுத்தனர்.. இதனால், ஆத்திரமடைந்த பாஜக எம்எல்ஏ, அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆவேசமாக தகராறு செய்தார்.
இங்கு கடை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்று கூறப்படுகிறது.. மத துவேஷம் காரணமாகவே, எம்எல்ஏ இப்படியான காரியத்தில் ஈடுபட்டதால், மிகப்பெரிய சர்ச்சையும், பரபரப்பும் அந்த பகுதிகளில் ஏற்பட்டுவிட்டது. இதற்கு பிறகு, தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் ஆச்சார்யா.
தொண்டை வலி: "இறைச்சி மற்றும் அசைவ உணவகத்திலிருந்து புகை வருகிறது.. துர்நாற்றம் வீசுகிறது.. அதனால்தான், நகராட்சி நிர்வாகிகளிடம் பேசினேன்.. அப்போது எனக்கு தொண்டை வலி இருந்தது.. தொண்டை வலியால், கொஞ்சம் சத்தமாக பேசிவிட்டேன்.. அவ்ளோதான்.
என்னுடைய செயல் யாருக்காவது வருத்தத்தை தந்திருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினருக்காக இதை செய்யவில்லை. பிரதமரின் தொலைநோக்கு பார்வையின்படி செயல்பட்டு வருகிறேன். அனைவரின் ஆதரவையும், நம்பிக்கையையும், அனைவரின் கூட்டு வளர்ச்சியையும் விரும்புகிறோம்" என்று விளக்கம் தந்திருந்தார்.
பரபரப்பு: எனினும் இந்த விவகாரத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.. சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் இதுகுறித்து ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
அதில், "நகர விற்பனைக்குழு அமைத்து, விற்பனை மண்டலங்களை உருவாக்கி, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது.. ஆனால், இதுவரை, நகர விற்பனைக் குழு, வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை. விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை. விற்பனை மண்டலங்களும் அடையாளம் காணப்படவில்லை.
கறிக்கடை: இப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ ஒருவர், சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு சாலையோர இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவக வியாபாரிகளை மிரட்டுவது மிகுந்த கவலையளிக்கிறது" என்று அதில் பதிவு செய்துள்ளது. வெற்றி பெற்ற முதல்நாளே, கறிக்கடைக்கு சென்று பாஜக எம்எல்ஏ செய்த சம்பவம், ராஜஸ்தானில் பேசுபொருளாகி வருகிறது.












Click it and Unblock the Notifications