குஜராத் கடலில் அடிக்கடி பிடிபடும் பாக். படகுகள்... காரணம் என்ன தெரியுமா?
அகமதாபாத்: குஜராத் கடல் பகுதியில் சமீபகாலமாக அதிகளவு பாகிஸ்தானில் இருந்து வரும் மர்ம படகுகள் சுற்றி வருவது அதிகரித்துள்ளது. காரணம் அந்த வழி தான் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் அனுமதியின்றி நுழைவதற்கு எளிதானது எனக் கூறப்படுகிறது.
கடந்தவாரம் குஜராத் கடற்கரையோர பகுதியில் பாகிஸ்தானின் 10 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்தது. இதனால் 200 கமாண்டோ படை வீரர்கள் ஆமதாபாத் நகருக்கு பாதுகாப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, குஜராத் மாநிலம் கட்ச் கடற்கரையோரம் உள்ள கோட்டீஸ்வர் பகுதியில் பாகிஸ்தானிய மீன்பிடி படகு ஒன்று அத்துமீறி நுழைந்ததை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டனர். அவர்கள் அந்த படகை நோக்கி சென்றபோது படகில் இருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். படகில் பாதுகாப்பு படையினர் தீவிரசோதனை மேற்கொண்டனர். சந்தேகத்துக்கு இடமான எந்த ஒரு பொருளும் அதில் காணப்படவில்லை.
எனினும், கட்ச் கடற்கரையோரம் மீன்பிடி படகில் வந்தவர்கள் பாகிஸ்தானின் தற்கொலைப்படை தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.
ஆனால், இத்தகைய சம்பவங்கள் நடப்பது இது முதல்முறையல்ல. கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை குஜராத்தின் சர் கிரீக் கடல் பகுதியில் சுமார் 8 மர்ம படகுகள் பிடிபட்டுள்ளன.

எளிய வழி...
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைவதற்கு தீவிரவாதிகளும், போதைப் பொருள் கடத்துபவர்களும் விரும்பித் தேர்ந்தெடுப்பது குஜராத் வழியிலான கடல் பயணத்தைத் தான். இது இந்தியாவின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரிப்பதாக உள்ளது.
ஒரே மாதிரியான பொருட்கள்...
இது தொடர்பாக இந்திய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் ஒன் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில், ‘சமீபகாலமாக இவ்வாறு பிடிபடும் அனைத்து படகுகளிலும் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டதற்கான ஆதாரம், போர்வைகள், உணவு, உயிர்காக்கும் ஆடை ஆகியவை கிடைக்கப்பட்டுள்ளன' என்றனர்.
படகு மூலம்...
ஒருமுறை இவ்வாறு வந்த மர்ம படகில் இருந்த 8 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்ய முற்பட்டபோது, அவர்கள் மற்றொரு படகில் பாகிஸ்தானிற்கு தப்பிச் சென்றதாக கூறுகின்றானர்.
போதைப் பொருள் கடத்தல்...
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் அனுமதியின்றி இவ்வாறு நுழைபவர்கள் நோக்கம் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்காகக்கூட வருகின்றனர். சிலர் போதைப் பொருளை வேறு படகில் இந்தியாவிற்குள் மாற்றி விடவும் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தங்களது நோக்கம் நிறைவேறியதும் மீண்டும் கடல் மார்க்கமாகவே பாகிஸ்தானிற்கு திரும்பி விடுகிறார்களாம்.
தகர்க்கப்பட்ட படகு...
கடந்த 2014ம் ஆண்டு இப்படியாக குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைய முற்பட்ட படகு தகர்க்கப்பட்டது. முதலில் படகில் உள்ளவர்களை கடற்படை அதிகாரிகள் சரணடையக் கூறி எச்சரித்தார்கள். ஆனால், அதற்கு அவர்கள் உடன்படாத நிலையில் படகு தகர்க்கப்பட்டது நினைவுக் கூறத்தக்கது.
கடல் மார்க்கமாக...
பெரும்பாலும் கடல் மார்க்கமாக போதைப் பொருள் கடத்தல் நடைபெறுகிறது என்பதே இந்திய கடற்படை அதிகாரிகளின் கருத்து. கடந்த காலத்தில் கூட இதே நோக்கத்தில் இந்தியாவிற்குள் நுழைய முற்பட்ட பல படகுகள் பிடிபட்டுள்ளனவாம்.
ரூ. 1,500 கோடி...
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இவ்வாறு பிடிபட்ட படகுகளில் இருந்து சுமார் 1,500 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications