வாசலில் "கள்ளக்காதலன்".. சாம்பார் வைத்தே கணவனை "காலி" செய்த ஒத்த ரோசா.. கையாலேயே ஊட்டி விட்டாராம்
சாம்பாரில் விஷத்தை கலந்து கணவனை கொன்றுவிட்டார் மனைவி
ஜெய்ப்பூர்: நைட் டின்னரை கணவனுக்கு மனைவி தன் கையாலேயே ஊட்டிவிட்டார்.. அதற்கு பிறகுதான் அந்த பகீர் சம்பவம் நடந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள தௌசா மாவட்டத்தில் லால்சோட் காவல் நிலையத்திற்கு உட்பட்டது சாந்த்சென் என்ற கிராமம்.
இந்த கிராமத்தில் வசித்து வருபவர் ஓம் பிரகாஷ் குர்ஜார்.. இவரது மனைவி பெயர் ரெஸ்டா.. இவர்களுக்கு திருமணம் நடந்து பல வருடமாகிறது..

தம்பதி
ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்த குடும்ப வாழ்க்கை, திடீரென சண்டை, சச்சரவுமாக மாறியது.. தினமும் தகராறு, அடிதடி வரை குடும்பம் சென்றுவிட்டது... இப்படிப்பட்ட சூழலில்தான், ரெஸ்டாவுக்கு திடீரென ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.. அந்த இளைஞர் பெயர் பிண்டு.. ஆரம்பத்தில் சாதாரணமாக பழகினார்கள்.. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறிவிட்டது..

உல்லாசம்
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்தனர்.. ஒருகட்டத்தில் இந்த விஷயம், ரெஸ்டாவின் கணவனுக்கு தெரிந்துவிட்டது.. ஏற்கனவே குடும்பத்தில் ரணகளம் நடக்கும்போது, இப்போது பூகம்பமே வெடித்துவிட்டது.. இதனால் ரெஸ்டாவுக்கு கணவன் மீது மேலும் ஆத்திரம் கூடியது.. ஒரேடியாக தீர்த்து கட்ட முடிவு செய்தார்.. அதேசமயம், தன் மீதும் கொலைப்பழி விழுந்துவிடக்கூடாது என்றும் கவனமாக இருந்தார்.

திருமணம்
சம்பவத்தன்று, ஒரு திருமண நிகழ்ச்சிக்கு கணவன் சென்றிருந்தார்... இதுதான் சாக்கு என்று நினைத்த ரெஸ்டா, கள்ளக்காதலனுக்கு போனை போட்டு தூக்க மாத்திரைகளை வாங்கி வர சொன்னார்.. அன்றைய தினம் இரவு விதவிதமாக சமைத்தார்.. அந்த குழம்பில் மாத்திரைகளை கலந்தார்.. கணவருக்கு குழம்பை அள்ளி அள்ளி ஊற்றினார்.. அப்படியே பக்கத்தில் இருந்த மாமியாருக்கும் அதே குழம்பை ஊற்றி தந்தார்.. 2 பேரும் சாப்பிட்டு கொஞ்ச நேரத்தில் மயங்கி விழுந்தனர்.. வாசலில் நின்றிருந்த கள்ளக்காதனை அழைத்து, கணவனை கடுமையாக தாக்க சொன்னார்.. அதன்படியே தாக்கப்பட்டு, கணவர் இறந்துவிட்டார்..

மாமியார்
ஆனால், மாமியார் மட்டும் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.. மறுநாள் காலை படுக்கையில் கணவன் இறந்துகிடந்ததை பார்த்து, ரெஸ்டா கதறி கதறி அழுதார்.. போலீசாரும் விரைந்து வந்தனர்.. மாமியாரை விசாரித்தனர்.. நைட் சாப்பிட்டது மட்டும்தான் தெரியும், அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை, வழக்கமாக காலையில் எழுந்துவிடுவேன், இன்றைக்கு என்னால் முடியவில்லை.. என் மருமகள்மீது சந்தேகமாக இருக்கிறது..

மருமகள்
அதுமட்டுமல்ல, என்னைக்கும் இல்லாமல் என் மகனுக்கு, மருமகள் சாப்பாடு ஊட்டிவிட்டார்" என்றார். அப்போதுதான், சாப்பாடு மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.. கிச்சனில் சென்று சோதனைபோட்டனர்.. போதை மாத்திரையையும் கண்டுபிடித்து எடுத்துவிட்டனர்.. பிறகு மருமகள் ரெஸ்டாவிடம் விசாரணை நடத்தியதில், கணவனுக்கு உணவில் விஷமாத்திரை கொடுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்... இப்போது கள்ளக்காதலர்கள் 2 பேருமே ஜெயிலில் உள்ளார்கள்.. கொலை நடந்த, வெறும் 12 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications