பெட்ரூமில் கணவனின் காலை மனைவி பிடிக்க, மகள் கழுத்தை பிடிக்க, ஒருவர் கையை பிடிக்க.. இவர்களும் பெண்களா
போபால்: தாலி கட்டிய கணவன் என்று மனைவியும் நினைக்கவில்லை.. பெற்ற தகப்பன் என்று மகள்களும் நினைக்கவில்லை.. இந்த கொடுமை நடந்து இத்தனை நாட்கள் ஆகியும், வீடியோ தொடர்பாக எந்த நடவடிக்கையும் யாருமே எடுக்கவில்லை.. சொந்த வீட்டிற்குள்ளேயே ஒருவர், தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட துயரம் நடந்துள்ளது. என்ன நடந்தது மத்திய பிரதேச மாநிலத்தில்?
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா என்ற பகுதியில் வசித்து வருகிறார் ஹரேந்திர மவுரியா.. இவர் அந்த பகுதியிலேயே எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். மனைவி, குழந்தைகளுடன், ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது 3 மகள்களும் சேர்ந்து, பெற்ற தகப்பனை சரமாரியாக அடித்து தாக்கியிருக்கிறார்கள்.. இந்த தாக்குதல் சம்பவத்தை வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், மவுரியாவின் மனைவி, அவரது கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்ள, அவரது மகள்கள், நீளமான கம்பு எடுத்து, அப்பாவை அடித்து தாக்குகிறார்கள். இதில் வலி பொறுக்க முடியாமல் அழுதுகொண்டே கதறுகிறார் மவுரியா.
தந்தை மீது கொடூர தாக்குதல்
மகள்கள் அப்பாவை தாக்குவதை, அவரது மகன் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.. ஓடிச்சென்று அப்பாவை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.. தன்னுடைய சகோதரியின் கையை பிடித்து தடுத்து நிறுத்த முயல்கிறார். ஆனால், அந்த சகோதரி, சகோதரனையும் சேர்த்தே வெளுத்து வாங்குகிறார்..
மகள்களின் கொடூர தாக்குதலிலிருந்து மவுரியா தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கிறார்.. ஆனால், அவரது மனைவி விடவில்லை.. மவுரியாவை கெட்டியாக பிடித்துக் கொள்கிறார். இதனால் மகள்கள் தன்னுடைய அப்பாவை தொடர்ந்து தாக்குகிறார்கள். இந்த வீடியோ கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியாகியிருந்தது.
2 மகள்களின் திருமணம்
ஆனால், இப்போது மவுரியா இறந்துவிட்டார்.. சடலமாக தற்போது மீட்கப்பட்டுள்ளார்.. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று தெரியவில்லை.. போலீசார் இதுதொடர்பாக விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, "மவுரியாவுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்துள்ளது.. கடந்த 1ம் தேதிதான், தன்னுடைய 2 மகள்களின் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்..
இந்த திருமணம் முடிந்ததுமே, அவரது மனைவி மவுரியாவை விட்டு பிரிந்து, அவருடைய அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்தும், கவலையுடன் காணப்பட்டாராம் மவுரியா.. வீட்டிலேயே ஒரு அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.. வீட்டை விட்டு அவர் வெளியே வராததால், அவரது காணாமல், குடும்பத்தினர் தேடியிருக்கிறார்கள்.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
இதற்கு பிறகுதான், வீட்டிலிருந்த அறையின் கதவை திறந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.. சம்பவ இடத்திற்கு சென்ற எங்களது போலீசார், அவரது சடலத்தைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி விசாரித்ததற்கு, குடும்ப பிரச்சனை காரணமாக மவுரியா தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினர் சொல்கிறார்கள். ஆனால், மவுரியாவின் அப்பாவும், அவரது சகோதரரும், மவுரியாவை குடும்பத்தினரே கொன்றுவிட்டதாக சொல்கிறார்கள். அதனால், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், இதுதொடர்பான உண்மை தெரியவரும். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்றனர்.
அதெப்படி ஒரே வீட்டில் தெரியாமல் இருக்கும்?
இதனிடையே, சோஷியல் மீடியாவில் இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பையும், சந்தேகத்தையும் கிளப்பி விட்டுள்ளது.. 3 மகள்கள், தந்தையை தாக்கும் வீடியோவை எடுத்து, இணையத்தில் பதிவிட்டது யார்? அப்போதே ஏன் வீடியோ அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை? ஒரே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருந்த நபரை, குடும்பத்தினருக்கு எப்படி தெரியாமல் போயிற்று? இதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்" என்றெல்லாம் கோரிக்கை விடுத்துவருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications