லாட்ஜில் ரூம் போட்டு.. "என் உடம்பில் டிரஸ்ஸே இல்லை.. அமைச்சர் மகனை விடாதீங்க".. போலீசுக்கு போன பெண்
ஹோட்டலில் ரூம் போட்டு அமைச்சர் மகன் பலாத்காரம் செய்துவிட்டதாக பெண் புகார் தந்துள்ளார்
ஜெய்ப்பூர்: ஹோட்டலில் ரூம் போட்டு என்னை பலாத்காரம் செய்துவிட்டார் என்று இளம்பெண் ஒருவர் ராஜஸ்தான் மாநில அமைச்சரின் மகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. சோக் கெலாட் மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
இங்கு பொது சுகாதார துறை அமைச்சராக உள்ளவர் மகேஷ் ஜோஷி... இவரது மகன் ரோகித் ஜோஷி என்பவர் மீதுதான் பகீர் புகார் கிளம்பி உள்ளது..

ஹோட்டல் ரூம்
அதுவும் பாலியல் புகார் தொடுக்கப்பட்டுள்ளது.. ஜோஷிக்கு 23 வயதாகிறது.. இளம்பெண் ஒருவர் இவர்மீது போலீசில் புகார் தந்துள்ளார்.. அந்த புகாரில் அவர் சொல்லி உள்ளதாவது: "கடந்த வருடம் ஃபேஸ்புக் வழியே ஜோஷி எனக்கு அறிமுகமானார்.. அதற்கு பிறகு, இருவரும் மாறி மாறி போனில் பேசிவந்தோம்... பிறகு நேரிலேயே பார்ப்பதென்று முடிவு செய்தோம்..

டிரஸ் இல்லை
அதன்படி, முதன்முறையாக ஜெய்ப்பூரில் சந்தித்து பேசினோம்.. கடந்த வருடம் ஜனவரி 8-ம் தேதி, சவாய் மாதோபூருக்கு வரும்படி என்னிடம் ஜோஷி சொன்னார்.. நானும் சென்றேன்.. அப்போது, எனக்கு தெரியாமல் கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு, என்னை பலாத்காரம் செய்துவிட்டார்.. மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால், என் உடம்பில் டிரஸ் இல்லை.. உடனே என்னிடம் சில போட்டோக்களை ஜோஷி நீட்டினார்..

வீடியோக்கள்
அதில், டிரஸ் இல்லாமலேயே என்னை ஏராளமான போட்டோக்கள், வீடியோக்களை எடுத்திருந்தது தெரியவந்தது.. இன்னொருமுறை, ஹோட்டலில் ரூம் போட்டு என்னை கூட்டி சென்றார்.. கணவன், மனைவி என்றுதான் அந்த ஹோட்டல்களில் ரூம் புக் செய்தார்.. அந்த ஹோட்டல் ரூமில் என்னையே திருமணம் செய்து கொள்வதாக உறுதி தந்தார்.. கடந்த வருடம் மட்டும் என்னை பலமுறை அமைச்சரின் மகன் பலாத்காரம் செய்தார்..

அபார்ஷன்
என்னை பலமுறை கண்மூடித்தனமாக அடித்தார்.. ஆபாச போட்டோக்களை எடுத்தார்.. அதனை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவேன் என்றும் மிரட்டி வருகிறார் என்று புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ரோஹித் ஜோஷி மீது கற்பழிப்பு, போதை மருந்துகளால் காயப்படுத்துதல், கருச்சிதைவு ஏற்படுத்துதல், இயற்கைக்கு மாறான குற்றங்கள், கிரிமினல் மிரட்டல் மற்றும் மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வடக்கு டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்...

பரபரப்பு
இந்த வழக்கு குறித்து ராஜஸ்தான் போலீசுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.. தேர்தல்கள் நெருங்கி வரும் சூழலில், ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சரின் மகன் மீது பாலியல் புகார் கிளம்பி உள்ளதும், அதன்மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications