நம்பிக்கையில்லாத பேச்சு.. குலாம் நபி ஆசாத்திற்கு என்னாச்சு.. திரிணமூலில் ஐக்கியமாகிறாரா?

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு அக்கட்சி வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறாது என குலாம் நபி ஆசாத் சொன்னது ஏன்? ஒரு வேளை இவரது அதிருப்தியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறுவடை செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நேற்று பேரணி நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் பேசினார். அவர் கூறுகையில் பிரிவு 370 குறித்து உச்சநீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும். இல்லாவிட்டால் ஆளும் பாஜக அரசு முடிவு செய்யலாம். ஆனால் சட்டத்தை ரத்து செய்ததே ஆளும் பாஜக அரசுதான் என்கிற போது அவர்கள் எப்படி மீண்டும் கொண்டு வருவார்கள்?

இந்த முடிவை திரும்ப பெற காங்கிரஸுக்கு 300-க்கும் மேற்பட்ட எம்பிக்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தொகுதிகளை கைப்பறற முடியும் என நான் நினைக்கவில்லை என கூறிய அவர் கடவுளின் மேல் பாரத்தை போட்டுள்ளார். எனினும் அதற்கும் வாய்ப்புகள் குறைவுதான் என்றுள்ளார்.

கழுதை தேய்ந்து

கழுதை தேய்ந்து

காங்கிரஸ் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இருப்பதை அக்கட்சியின் கடந்த கால தேர்தல் முடிவுகள் பார்த்தாலே தெரிகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து பெருமளவுக்கு நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி வெறும் 19.3 சதவீதம் வாக்குகளையே பெற்றது. 44 இடங்களில் வென்றது.

மோசமான செயல்பாடு

மோசமான செயல்பாடு

இது காங்கிரஸ் கட்சியின் மிகவும் மோசமான செயல்பாடாகும். மிக பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 59 இடங்களில் மட்டுமே வென்றது. லோக்சபாவில் எதிர்க்கட்சியாக செயல்பட ஒரு கட்சிக்கு 55 எம்பிக்கள் தேவை. ஆனால் அது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை.

 10 சதவீதம் சீட்டுகள்

10 சதவீதம் சீட்டுகள்

அது போல் 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அரசு செய்த தவறுகளை சுட்டிக் காட்டி காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார். இதனால் கட்சி புத்துணர்வு பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்று. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற சுமார் 10 சதவீதம் சீட்டுகளை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சியை பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் குலாம் நபி ஆசாதே தனது கட்சி குறித்து நம்பிக்கையில்லாமல் பொது வெளியில் பேசுவதால் சோனியாவுக்கு ராகுலுக்கும் எத்தனை வேதனையை தேடி கொடுக்கிறார் என்பதை இவர் அறியாமல் இல்லை.

மாநிலங்கள்

இருந்தாலும் பேசுகிறார் என்றால், அதற்கு காரணம் கடந்த இரு தேர்தல்களிலும் எதிர்க்கட்சியாக கூட நாடாளுமன்றத்தில் செயல்பட முடியாத நிலை இருக்கிறது. சரி மாநிலங்களிலாவது காங்கிரஸ் ஆட்சி இருக்கும் என்றால் அங்கும் அக்கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இப்படியிருக்கும் போது காங்கிரஸ் மீது எப்படி நம்பிக்கை வரும் என அவர் மறைமுகமாக கேட்பது தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் நிலவுவதால் ஒற்றுமையில்லாமல் நிர்வாகிகள் களத்தில் இறங்கி வேலை பார்க்கவில்லை . ஒரு வேளை இப்படியெல்லாம் சொன்னால் கட்சி தலைமை தீவிரமாக தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுக்கும் என்பதால் அப்படி சொல்கிறாரா இல்லை இது போன்று கட்சிக்கு எதிராக பேசிவிட்டு அவரை கட்சியிலிருந்து நீக்குவதை விரும்புகிறாரா?

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலிருந்து அதிருப்தியாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி சுற்றி வளைத்து சேர்த்து கொள்கிறது. இதனால் மம்தா மீதும் அவரது கட்சி மீதும் காங்கிரஸ் உள்ளிட்டோருக்கு கடும் அதிருப்தி நிலவி வருகிறது. அது போல் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கம் காட்டுவதையும் மம்தா கைவிட்டுவிட்டார்.

டெல்லி அரசியல் நிலவரம்

டெல்லி அரசியல் நிலவரம்

டெல்லி அரசியல் நிலவரம் இவ்வாறிருக்கும் போது காங்கிரஸ் கட்சி இனியாவது விழித்துக் கொள்ளுமா. இல்லை அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்களை இழக்குமா? வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 300 தொகுதிகளில் கூட வெல்லாது என்று கூறிய குலாம் நபி ஆசாத்தின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? அவரது அதிருப்தியை மம்தா பானர்ஜி அறுவடை செய்வாரா? இல்லை சொந்த கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+