பாக். விமானப்படையின் இதயத்தை அடித்த இந்தியா.. இந்த மாஸ்டர் ஸ்ட்ரோக்கை எதிர்பார்க்கவே இல்லை.. சபாஷ்
டெல்லி: பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா மிகக் கடுமையான பதிலடிகளைக் கொடுத்து வருகிறது. இப்போது மூன்று முக்கியமான படைத்தளங்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மூன்று ஏர்பேஸ்கள் மீதான தாக்குதல் ஏன் முக்கியம்.. இதன் பின்னணி என்ன.. இந்தியா எப்படி பாகிஸ்தான் விமானப்படையின் இதயத்திலேயே தாக்குதல் நடத்தியிருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்று வருகிறது. இருப்பினும், அதில் எந்தவொரு வெற்றியும் அவர்களுக்குக் கிடைக்கவே இல்லை. பாகிஸ்தான் ட்ரோன்களை இந்தியா தொடர்ச்சியாகச் சுட்டு வீழ்த்தி வருகிறது. அதேநேரம் பாகிஸ்தான் தாக்குதல்களுக்கும் தக்கப் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தியா
இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள முக்கியமான மூன்று விமானப்படைத் தளங்களைக் குறிவைத்து இந்தியா தாக்கியுள்ளது. இந்தியாவின் இந்த அட்டாக் ஏன் முக்கியம்.. பாகிஸ்தானுக்கு இது எவ்வளவு பெரிய இழப்பு என்பது குறித்து நாம் பார்க்கலாம்.!
நூர் கான் விமான தளம், ராவல்பிண்டி
இந்தியா இந்த நூர் கான் விமான தளத்தில் தாக்குதல் நடத்தியது ரொம்பவே முக்கியமானது. ஏனென்றால் இந்த விமானத் தளம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து வெறும் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நூர் கான் விமானப்படைத் தளம் என்பது பாகிஸ்தானின் மிகவும் முக்கியமான ஏர் பேஸ்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. விமானப்படைத் தளமாக மட்டுமின்றி விஐபிகளின் விமான போக்குவரத்து மையமாகவும் இந்த ஏர்பேஸ் இருந்தது. முன்பு சக்லாலா விமானப்படைத் தளம் என்று அழைக்கப்பட்ட இது, 1965 மற்றும் 1971 போர்களிலும் கூட முக்கிய பங்கு வகித்துள்ளது.
வான்வழி எரிபொருள் நிரப்புதல் மற்றும் போக்குவரத்து பணிகளை மேற்கொள்ள இந்த ஏர்பேஸ் மிக முக்கியமாக உதவுகிறது. இந்த ஏர் பேஸில் ஐந்து முதல் ஆறு பிரிவுகள் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. மேலும், விமானப்படை பைலட்களுக்கான பயிற்சிக் கல்லூரியும் இங்கு அமைந்துள்ளது. இந்தளவுக்கு முக்கியமான நூர் கான் படைத்தளத்தை இந்தியா தாக்கியுள்ளது. குறிப்பாகத் தலைநகருக்கு அருகே அமைந்துள்ள இடத்தையும் கூட இந்தியா தாக்கியுள்ளது. பாகிஸ்தானின் எந்தவொரு இலக்கையும் இந்தியா நினைத்தால் தாக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது.
சக்வால், முரிட் விமானப்படை தளம்
அடுத்து பாகிஸ்தானின் சக்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள முரிட் விமானப்படைத் தளம்.. கடந்த இரண்டு நாட்களாக இங்கிருந்து தான் இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. ஷாபர்-1 மற்றும் பைரக்தர் TB2 போன்ற மேம்பட்ட ட்ரோன்களை இயக்கும் பல பாகிஸ்தான் விமானப்படை படைப்பிரிவுகள் இங்கு தான் உள்ளன.
இந்த ஏர் பேஸ் பாகிஸ்தானின் ட்ரோன் போர் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.. ட்ரோன் கண்காணிப்பு, தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் மூலம் உளவுத்துறை சேகரிப்பு எல்லாம் இங்கிருந்து தான் நடக்கிறது. கடந்த இரு நாட்களாக ட்ரோன்களை வீழ்த்திய இந்தியப் பாதுகாப்புப் படை, இப்போது ட்ரோன்கள் எங்கிருந்து ஏவப்படுகிறதோ.. அந்த மையத்தையே குறிவைத்துத் தாக்கியுள்ளது.
ரஃபிகி ஏர் பேஸ், ஷார்கோட்
1965 போர் வீரர் படைத் தலைவர் சர்பராஸ் அகமது ரஃபிகி என்பவருக்காக ஷார்கேட் படைத்தளம் இந்தப் பெயரைப் பெற்றது. இங்கு தான் JF-17 மற்றும் மிராஜ் போர் விமானங்களின் பல படைப்பிரிவுகள் உள்ளன. மேலும், பல ஹெலிகாப்டர்களும் அங்கு தான் உள்ளன.. மத்திய பஞ்சாப்பில் இருப்பதால் இங்கிருந்து தான் பாகிஸ்தான் முதன்மையாக விமானங்களை அனுப்புகிறது. இந்த இடத்தையும் இந்தியா குறிவைத்துத் தாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications