அந்த 20 நிமிடம்தான் இந்தியாவையே உலுக்க போகிறது.. உலக நாடுகளை குழப்பிய ஒடிசா ரயில் விபத்து டைம்லைன்!
புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்தின் டைம் லைன் ரயில்வே துறையினர் இடையே பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ஒரு 20 நிமிட இடைவெளி இந்த விபத்தில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
கொல்கத்தாவில் ஏற்பட்ட ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கி உள்ளது. அங்கே அள்ள அள்ள உடல்களாக வந்து கொண்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்தாக பார்க்கப்படுகிறது. பீகார் ரயில் விபத்தில் 1981ல் 800 பேர் இறந்தனர். அதேபோல் 1956ல் அரியலூர் ரயில் விபத்தில் 250 பேர் இறந்தனர். அதற்கு இணையான விபத்து இப்போது ஒடிசாவில் ஏற்பட்டு உள்ளது.

இந்த விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 600 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கோரமண்டல் ரயில் மூலம் சென்னை வர முன்பதிவு செய்திருந்தவர்கள் எண்ணிக்கை 869 பேர் ஆகும். இதனால் பலி எண்ணிக்கை, காயம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது மிக முக்கிய ரயில் என்பதால் பலர் இதில் தினமும் பயணம் செய்வார்கள்.
இங்கே முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்தவர்கள் விவரங்கள் கிடைக்கவில்லை என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புகள் உள்ளன.அங்கே இரவு முழுக்க அள்ள அள்ள உடல்கள் வந்துள்ளன.
குழப்பம்: ஒடிசா ரயில் விபத்தின் டைம் லைன் ரயில்வே துறையினர் இடையே பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ஒரு 20 நிமிட இடைவெளி இந்த விபத்தில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த ரயில்வே விபத்து குறித்து ஆய்வு செய்து வரும் சர்வதேச ஆய்வாளர்களையும் கூட இது பெரிய அளவில் குழப்பி உள்ளது.
அது என்ன குழப்பம் என்று கேட்கிறீர்களா?.. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதவில்லை.
முதலில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்தான் விபத்தில் சிக்கி உள்ளது. அதன்படி இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் வந்த போது அங்கே இருந்த மெயின் ரயில்வே தண்டவாளத்தில் ரயிலை கொண்டு செல்ல கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர்.
ரயில் கடந்த பின் சில நொடிகளில் அதை சிவப்பாக்கி உள்ளனர். அதாவது சிக்னல் கொடுத்தவர் தவறுதலாக கொடுத்துவிட்டு மாற்றி இருக்கலாம். அல்லது வேண்டுமென்றே செய்து இருக்கலாம். அல்லது தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம்.
சிவப்பாக விளக்கு மாறியதை கவனிக்காமல் கோரமண்டல் முன்னோக்கி சென்றுள்ளது. அந்த பாதையில் இருந்த சரக்கு ரயிலில் கோரமண்டல் ரயில் மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.
இந்த நேரத்தில்தான் 20 நிமிடம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.
இதில் முதலில் கோரமண்டல் ரயிலுக்கு பச்சை கொடுத்து பின் சிவப்பு மாற்றியதை கூட தவறு என்று சொல்லலாம்.. ஆனால் அதன்பின் ரயில் தடம் புரண்டு 20 நிமிடம் கழித்தும் கூட எதிரே வந்த பெங்களூருக்கு ரயிலுக்கு ஏன் தகவல் தரப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த 20 நிமிடம்தான் இந்தியாவையே உலுக்கி உள்ளது.
அந்த 20 நிமிடம் ரயில்வே அதிகாரிகள் என்ன செய்தனர். முதல் முறை சிக்னல் தவறாக கொடுத்தது ஒரு தவறு.. ஆனால் பெங்களூர் ரயிலுக்கு தகவல் தெரிவிக்காதது இரண்டாவது தவறு. எப்படி இவர்கள் உடனே இன்னொரு தவறை செய்தனர்.
அந்த அளவிற்கு அலட்சியம் ஏன்? அல்லது வேண்டுமென்றே இதெல்லாம் செய்யப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications