வைரஸ் காய்ச்சலுக்கு புற்றுநோய் மருந்து.. கணவனைக் கொன்ற மனைவி, கள்ளக்காதலன்.. ஹவுராவில் கொடூரம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கணவருக்கு புற்றுநோய் மருந்து கொடுத்து மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, கொலை செய்த பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபகாலமாக திருமணம் தாண்டிய உறவு, இன்ஸ்டாகிராம், முகநூல் மூலம் காதல் போன்ற பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் கொலைச் சம்பவங்களும் அரங்கேறி வருவது பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹவுராவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கணவருக்கு புற்றுநோய் மருந்து கொடுத்து மனைவியே கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம், ஹவுராவைச் சேர்ந்தவர் நசிம் சர்தார். துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சாஹினா பர்வீன். நசிம் சர்தார் கடந்த மூன்று வாரங்களாக கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், நசீமை அவரது மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்துள்ளார்.
மேலும், உள்ளூர் மருந்தாளுநரான (பார்மசிஸ்ட்) ஷேக் மோர்செலிம் என்பவரிடம் கணவருக்கு கடும் காய்ச்சலாக உள்ளதாகக் கூறியுள்ளார். ஷேக் மோர்செலிம் மற்றும் சாஹினா பர்வீன் இருவரும் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகளை பரிந்துரைப்பதற்குப் பதிலாக புற்றுநோய்க்கான கீமோதெரபி மருந்துகளை பரிந்துரைத்துள்ளார்.
இதையடுத்து, கீமோதெரபி மருந்துகளை சாஹினா பர்வீன், நசிம் சர்தாருக்கு கொடுத்துள்ளார். இந்த மருந்தை உட்கொண்ட பின்னர் நசிமின் உடல்நிலை மேலும் மோசமாகத் தொடங்கியிருக்கிறது. உடல்நிலை மோசமாகி ஒருகட்டத்தில் நசிம் தனது சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, அவரை தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நசிமின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயழிலக்கத் தொடங்கியுள்ளது. இதனால், மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நசிம் முன்னர் எடுத்துக் கொண்ட மருந்துகள் குறித்த விவரங்களை மருத்துவர்கள் கேட்டுள்ளனர். அவர் என்னென்ன மருந்துகளை எப்போதெல்லாம் உட்கொண்டார் என்பது குறித்து சாஹினா கூறியுள்ளார்.
அப்போது, அவருக்கு புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரபி மருந்துகளை வழங்கியது கண்டறியப்பட்டுள்ளது. ஷேக் மோர்செலிம் இந்த மருந்துகளை வாய்மொழியாகப் பரிந்துரைத்துள்ளார். இந்நிலையில், உறுப்புகள் ஒவ்வொன்றாக செயழிலந்து சிகிச்சை பலனளிக்காமல் நசிம் சர்தார் பரிதாபமாக உயிரிழந்தார்.
நசிம் உயிரிழந்த செய்தி குறித்து தகவல் பரவியதும் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சஹினாவை கடுமையாகத் தாக்கி காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், ஷேக் மோர்செலிமின் வீடு, மருந்தகம், அவரது இருசக்கர வாகனம் ஆகியவற்றை சேதப்படுத்தி தீவைத்து எரித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, போலீஸார் மற்றும் ஆர்ஏஎஃப் படையினர் அப்பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, சஹினா மற்றும் மோர்செலிம் இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். நசிமின் உள்ளுறுப்புகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கணவருக்கு புற்றுநோய் மருந்து கொடுத்து மனைவியும், கள்ளக்காதலனும் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications