மனைவியை வைத்து சூதாடிய கணவன்.. பலாத்காரம் செய்ய நண்பர்களுக்கு அனுமதி.. இது சூதாட்டத்தின் உச்சக்கட்டம்
கான்பூர்: புராணத்தில் நடந்த சம்பவமெல்லாம், நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. உத்தரபிரதேசத்தில் இப்போது கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நகரை சேர்ந்தவர்கள் இந்த இளம் தம்பதியினர்.. இதில், கணவனோ சூதாட்டத்திற்கு அடிமையானவர்.. சூதாட்டத்துக்காக எதையும் வைத்து விளையாடக்கூடியவர்.. ஒருகட்டத்தில் தன்னுடைய மனைவியை அடமானம் வைத்தும் சூதாடிய கொடூர நிகழ்வு நடைபெற்றுள்ளது.

சூதாட்டம்: எனினும், சூதாட்டத்தில் தோல்வி அடைந்ததால், தன்னுடைய மனைவியை அவரின் நண்பர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தவும், அந்த கணவர் அனுமதித்துள்ளார். இந்த கொடுமையை தடுத்த போராடிய மனைவியின், கை விரலையும் உடைத்து கணவன் சித்ரவதை செய்துள்ளார். இறுதியில் அந்த பெண், போலீசுக்கு ஓடியிருக்கிறார்.. புகாரையும் தந்திருக்கிறார். அந்த புகார் மனுவில் உள்ளதாவது:
"எனக்கு 2013-ல் திருமணம் நடந்தது. வரதட்சணைக்காக என்னுடைய மாமனாரும், என்னுடைய கணவரும் என்னை சித்ரவதை செய்து தாக்கினார்கள்.. என்னுடைய கணவர் மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர், அவர் சூதாட்டத்தின்போது சுமார் 7 ஏக்கர் நிலத்தை வைத்து இழந்துவிட்டார். பிறகு என்னுடைய நகைகள் அனைத்தையும் சூதாட்டத்தில் வைத்து இழந்துவிட்டார்.
சித்ரவதை: அவரது நண்பர்களுடன் சூதாட்டத்தின்போது என்னையும் பணயம் வைத்தார்.. அதில் தோல்வி அடைந்ததால், பாலியல் வன்கொடுமை செய்யவும் அனுமதியளித்துள்ளார். அவர் எனக்கு தண்ணீர் கூட கொடுக்காமல், அவரது நண்பர்கள் இருக்கும்போது தாக்கினார். இதனால் நான் என்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டேன்.
ஆனால், செப்டம்பர் 4-ம் தேதி, என்னுடைய அம்மா வீட்டுக்கு நண்பர்களுடன் வந்த கணவர், என்னுடைய கையை உடைத்து, வீட்டுக்கு இழுத்துச் செல்ல முயன்றனர். அப்போது, என்னுடைய ஆடைகளைக் கிழித்து, என்னைத் தாக்கினார்.. அவருடைய நண்பர்களும் என்னை தாக்கினார்கள்.. எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் திரண்டு வந்ததும் அவர்கள் ஓடிவிட்டார்கள்..
குழந்தைகள்: எனக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.. என்னுடைய கணவர் அவர்களுக்காக வைத்திருப்பதை சேமிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே என்னுடைய கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் எனக்கு செய்த கொடுமைகளை என்னால் இப்போது வெளியில் சொல்ல முடியாது. அதை நான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்துவேன்" என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக ராம்பூர் காவல் கண்காணிப்பாளர் வித்யாசாகர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்..!!
இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸ் அதிகாரி மிஸ்ரா சொல்லியுள்ள, 7 ஏக்கர் நிலத்தை யாரிடம் அடமானம் வைத்துள்ளார் என்ற விசாரணையையும் மேற்கொண்டு வருவதாக கூறியிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, நண்பர்களுடன் வந்து கணவன் தன்னை தாக்கியபோது, "112 பெண்கள் உதவி" எண்ணுக்கு அழைத்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். அதற்கு பிறகே அவர்கள் அனைவரும் தப்பி சென்றதாகவும், அவர்கள் மீது இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications