விடிகாலை.. தூங்கி கொண்டிருந்த கணவர்.. அருகில் போன மனைவி.. "வீலென" ஒரு சத்தம்.. தெருவே மிரண்டு போச்சு
கணவன் முகத்தில் சுடு எண்ணெய்யை மனைவி கொட்டிவிட்டார்
போபால்: விடிகாலை தூங்கி கொண்டிருந்த கணவனின் அருகில் சென்றார் மனைவி.. அவ்வளவுதான் கணவரிடம் இருந்து வீல் என்று ஒரு சத்தம்.. மொத்த தெருவும் அலறி போய்விட்டது!
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை வெளியிட்ட செய்தி இது.. மத்திய பிரதேசத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.. இங்கு கணவன் - மனைவி இருவர் வசித்து வருகிறார்கள்.. கணவன் பெயர் அரவிந்த் அஹிர்வார்.. மனைவி பெயர் ஷிவ்குமாரி... அரவிந்த் ஒரு கூலி தொழிலாளியாம்.

அதனால் எப்போதுமே வேலை முடிந்து, கூலி பணத்தை வாங்கி கொண்டுதான் வீடு வந்து சேருவாராம்.. இதனால் வீட்டுக்கு வர லேட் ஆகுமாம்.. ஆனால் குமாரிக்கு இதனை ஏற்க முடியவில்லை.. "ஏன் தினமும் நைட் நேரத்தில் லேட்டாக வருகிறீர்கள்" என்று கணவனிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.
அவர் எவ்வளவோ புரிய வைத்தும், குமாரி மறுபடியும் மறுபடியும் சண்டை போட்டபடியே இருந்தார்.. தினமும் இந்த சண்டை நடப்பது வாடிக்கையாகி விட்டது. அப்போதெல்லாம், இவர்களின் சொந்தக்காரர்கள் விரைந்து வந்து சமாதானப்படுத்தி விட்டு செல்வார்களாம்..
இப்படித்தான் சமீபத்தில் ஒருநாள் வழக்கம்போல, அரவிந்த் வீட்டுக்கு லேட்டாக வந்திருக்கிறார்.. வழக்கம்போல குமாரியும் சண்டை போட்டுள்ளார்.. வழக்கம்போல சொந்தக்காரர்களும் சமாதானப்படுத்தி விட்டு போனார்கள்.. அதனால் எப்படியும் இனிமேல் தன் கணவன் வீட்டுக்கு சீக்கிரமாக வந்துவிடுவார் என்று குமாரி நம்பினார். ஆனால், சம்பவத்தன்றும் லேட்டாகத்தான் வந்தாராம்.
இதனால் குமாரிக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. அன்று இரவெல்லாம் அவருக்கு தூக்கமே இல்லை.. விடிய விடிய புரண்டு படுத்தவர், டக்கென எழுந்தார்.. மணி அப்போது விடிகாலை 5 இருக்கும்.. அங்கே ரூமில் தூங்கிக்கொண்டிருந்த கணவனை பார்த்தார்.. பிறகு கிச்சனுக்கு சென்று சுட சுட எண்ணெய்யை கொதிக்க வைத்து, அதை அரவிந்த் முகத்திலேயே ஊற்றிவிட்டார்.
அலறி அடித்து வலியால் அரவிந்த் துடிக்க.. அந்த சத்தம் கேட்டு சொந்தக்காரர்களும், அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்துள்ளனர்.. பிறகு அரவிந்தை மீட்டு உடனடியாக சாகரில் உள்ள பண்டேல்கண்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.. அரவிந்த் முகமெல்லாம் வெந்துவிட்டது.. நிறைய தீக்காயம் ஏற்பட்டுள்ளது..
இதையடுத்து குமாரியிடம் போலீசார் விசாரித்தபோது, தினமும் நைட் வீட்டுக்கு லேட்டாக வர்றாரு.. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன்.. அதான் எல்லாரும் தூங்கியவுடன் எண்ணெய்யை காய்ச்சி ஊத்திட்டேன்" என்று வாக்குமூலம் தந்துள்ளார். இப்போது அரவிந்த், குமாரி மீது புகாரை தந்துள்ளார்.. இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறதாம்..!












Click it and Unblock the Notifications