வச்சு செய்த ஆம்ஆத்மி.. மேலிடத்தையே கிறுகிறுக்க வைத்த பஞ்சாப் "தலை"கள் சன்னி, சித்து.. மோசமான தோல்வி
பஞ்சாப் தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
பஞ்சாப்: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும், அம்மாநில காங்கிஸ் தலைவரான சித்துவும் இன்றைய தேர்தல் ரிசல்ட்டில் படுதோல்வியை சந்தித்துள்ளனர்..!
117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் 2.2 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள்.. கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 77, ஆம் ஆத்மி 20, அகாலி தளம் 15, மற்றவர்கள் 15, அதிலும் பாஜக வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது.
இந்நிலையில், பஞ்சாபில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மீண்டும் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வந்து கொண்டிருந்தது.

குளறுபடிகள்
பஞ்சாப்பை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட திடீர் பிளவாகட்டும், அந்த மாநில முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் பதவி விலகி, பாஜகவுக்கு அனுதாபியாக மாறி வாக்கு சேகரித்ததாகட்டும், சித்துவின் வழிகாட்டுதலில் முதல்வர் சன்னியின் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டதாகட்டும் எல்லாமே அக்கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டன.

குளறுபடி
இப்படிப்பட்ட சமயத்தில்தான், பஞ்சாப் மாநிலத்தில் ராகுல் காந்தியால் அங்கீகரிக்கப்பட்ட சித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரானார்.. அவரது தலைமைத்துவ திறன்கள் இந்த தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கலாம் என்றுசொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது சித்து முன்னணியில் உள்ளதாக வாக்கு எண்ணிக்கை விவரங்கள் கூறுகின்றன.. அதேபோல, சித்துவின் தலைமை பங்களிப்பானது, இந்த தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமோ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது பாதகமான சூழலையே சித்துவுக்கு பெற்று தந்து வருகிறது.

சரண்ஜித் சிங்
மற்றொருபக்கம், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கிவிட்டார்.. பதார் சட்டப்பேரவை தொகுதியில் சன்னி போட்டியிட்டார்.. இவர் ஏற்கனவே, தனது பாரம்பரியமான சம்கவுர் சாகிப் தொகுதியிலும் போட்டியிட்டதன் மூலம், 2 தொகுதிகளில் அவர் போட்டியிட்டார்.. இந்த 2 தொகுதிகளிலுமே சன்னி ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்து, இப்போது பின்தங்கிவிட்டதாக வாக்கு எண்ணிக்கை விவரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் வேட்பாளர்
பஞ்சாப்பை பொறுத்தவரை சன்னி, சித்து இருவருமே ஸ்டார் வேட்பாளர்கள்.. இருவருமே இப்போதைக்கு லீடிங்கில் இருந்தனர்.. தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த ஆரம்பம் முதலே முயன்று வந்தவர் சித்து.. அதனால்தான், சன்னிக்கு பெரும் நெருக்கடிகளையும் தந்து வந்த நிலையில், தற்போதும் இவர்களுக்குள் இணக்கமான சூழல் இல்லை.. பெரும்பான்மை இந்த ரிசல்ட்டில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன செய்வது? என்ற பிளானில் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 2 தினங்களாகவே வந்தனர்.

சந்தேகம்
ஆனால், இந்த விவகாரத்தில் சித்து ஒதுங்கியே இருந்ததும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. பஞ்சாப்பில் உட்கட்சிப்பூசல் காரணமாகத்தான் கட்சி கரைந்து கொண்டிருக்கிறது.. இந்த முறைதேர்தலில் மறுபடியும் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் சரி, தோற்றாலும் சரி, இந்த பூசல் மேலும் அதிகமாகும் என்கிறார்கள்.. எனினும், இந்த 2 ஸ்டார் வேட்பாளர்களில், இருவருமே தங்கள் பலத்தை இழந்துவிட்டனர்..

சித்து
பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் போட்டியிட்ட சம்கார் சாஹிப்பதார், பதார் ஆகிய 2 தொகுதிகளிலுமே தோல்வியை தழுவிவிட்டார்.. அதேபோல, காங்கிரஸ் தலைவர் சித்துவும் வெற்றி வாய்ப்பை இழந்தார், இதுபோலவே, சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பதால், முன்னாள் முதல்வர் பிரகாஷ் பாதல் ஆகியோரும் மண்ணை கவ்வி உள்ளனர்.












Click it and Unblock the Notifications