பொருத்தமான பெண் கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்...: ராகுல்
டெல்லி: தேர்தலை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். பொருத்தமான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார் ராகுல்காந்தி.
காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல்காந்தி நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஜெயித்து ஆட்சியில் அமர்ந்தால் அடுத்த பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப் படுபவர். தொடர்ந்து அரசியல் குறித்தே சிந்தித்து செயலாற்றி வரும் அவரிடம் செய்தியாளர் சந்திப்பின் போது அவரது சொந்த வாழ்க்கையில் எதிர்காலத்திட்டம் குறித்தான கேள்வி முன் வைக்கப் பட்டது.
அதாவது ராகுல் எப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் எனக் கேட்கப் பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலாவது:-

தேர்தல் பணியில் தீவிரம்...
இது, எப்போதும் கேட்கப்படும் கேள்விதான். நான் இப்போது தேர்தலை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

என் திருமணம்...
துரதிருஷ்டவசமாக, எனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. ஆயினும், பொருத்தமான பெண் கிடைக்கும்போது, நான் திருமணம் செய்து கொள்வேன்.

படிப்பது என் பொழுதுபோக்கு...
புத்தகங்கள் படிப்பது எனது பொழுதுபோக்கு. என் சகோதரி பிரியங்காவைப் போல், நான் அதிகமாக இந்தி படங்கள் பார்ப்பது இல்லை.

நல்ல நடிப்பைப் பாராட்டுவேன்...
எனக்கு பிடித்த நடிகர்-நடிகைகள் யாரும் கிடையாது. பொதுவாக, நல்ல நடிப்பை பாராட்டுவேன்‘ என இவ்வாறு அவர் பதிலளித்தார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications